Skip to main content

Posts

Showing posts from January, 2017

ஆராதனை ஆராதனை - துதி

ஆராதனை  ஆராதனை - துதி ஆராதனை ஆராதனை (2) காலையிலும் மாலையிலும் ஆராதனை அப்பாவுக்கு (2)      1.தூய ஆவியே உமக்கு ஆராதனை துணையாளரே உமக்கு ஆராதனை வல்லபிதாவே உமக்கு ஆராதனை வழிகாட்டியே உமக்கு ஆராதனை 2.ஜீவ பலியே உமக்கு ஆராதனை ஜீவ தண்ணீரே உமக்கு ஆராதனை மேகஸ்தம்பமே உமக்கு ஆராதனை மேசியாவே உமக்கு ஆராதனை  3.அப்பா பிதாவே உமக்கு ஆராதனை மறுரூபமானவரே உமக்கு ஆராதனை கன்மலையே உமக்கு ஆராதனை காண்பவரே உமக்கு ஆராதனை

விண்ணப்பத்தை கேட்பவரே - 978

விண்ணப்பத்தை கேட்பவரே - என் கண்ணீரை காண்பவரே சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா 1. உம்மால் கூடும் எல்லாம் கூடும் ஒரு வார்த்தை சொன்னால் போதும் - ஐயா 2. மனதுருகி கரம் நீட்டி அதிசயம் செய்பவரே - ஐயா 3. சித்தம் உண்டு சுத்தமாகு என்று சொல்லி சுகமாக்கினீர் - ஐயா 4. என் நோய்களை சிலுவையிலே சுமந்து தீர்த்தீரையா - ஐயா 

பாவம் பெருகுதே பாரும் 202

பாவம் பெருகுதே பாரும் பரன் இயேசுவே அழியும் மனுக்குலம் அதையும் இரட்சிப்பீரே ஆத்தும இரட்சிப்பிழந்தவர் ஆயிரம் ஆயிரமாய் அன்றாடகம் இந்த மண்ணடியில் அழிந்து சாகின்றாரே இரட்சிப்பின் நற்செய்தி கேட்டவர் எச்சரிப்பை வெறுத்து இரட்சகர் இயேசுவை இழந்தோராய் இன்றும் கெட்டழிகின்றார் தானியேல் போல ஜெபித்திடும் தாசர் பலர் மறைந்தார் திறப்பின் வாசலில் நிற்கும் சிலர் தூங்கி களைத்துப் போனார் எமது காரியமாகவே யாரை அனுப்பிடுவேன் என்றவர் அழைக்கும் இன்ப சத்தம் என்னுள்ளம் தொனிக்குதே ஜீவனை வெறுத்து தியாகமாய் சேவையும் செய்திடுவேன் ஜீவனுக்கீடாக ஜனங்களை ஜீவ தேவன் தருவார் வெறுங்கையாய் பரலோகத்தில் வந்திடேன் இயேசு நாதா ஆத்தும ஆதாயம் செய்திடவே ஆசீர் பொழிந்தருளும்

மனதுருகும் தெய்வமே இயேசைய்யா

மனதுருகும் தெய்வமே இயேசைய்யா மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்      நீர் நல்லவர் சர்வ வல்லவர்      உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை      உம் அன்பிற்கு அளவே இல்லை      அவை காலைதோறும் புதிதாயிருக்கும் 1.   மெய்யாக எங்களது       பாடுகளை ஏற்றுக் கொண்டு       துக்கங்களை சுமந்து கொண்டீர் - ஐயா 2.   எங்களுக்கு சமாதானம்       உண்டு பண்ணும் தண்டனையோ       உம்மேலே விழுந்ததையா - ஐயா 3.   சாபமான முள்முடியை       தலைமேலே சுமந்து கொண்டு       சிலுவையிலே வெற்றி சிறந்தீர் - ஐயா 4.   எங்களது மீறுதலால்       காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்       தழும்புகளால் சுகமானோம் - உந்தன் 5.   தேடிவந்த மனிதர்களின்       தேவைகளை அறிந்தவராய்       ...

பிரியமானவனே உன் - 430

பிரியமானவனே - உன் ஆத்துமா வாழ்வது போல் - நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாய் இரு மகனே (மகளே) 1.   வாழ்க்கை என்பது போராட்டமே       நல்லதொரு போராட்டமே      ஆவிதரும் பட்டயத்தை      எடுத்துப் போராடி வெற்றி பெறு 2.   பிரயாணத்தில் மேடு உண்டு       பள்ளங்களும் உண்டு       மிதித்திடுவாய் தாண்டிடுவாய்       மான் கால்கள் உனக்குண்டு மறவாதே 3.   ஓட்டப் பந்தயம் நீ ஓடுகிறாய்       ஒழுங்கின்படி ஓடு மகனே       நெருங்கிவரும் பாவங்களை       உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே

கைதட்டி பாடி மகிழ்ந்திருப்போம்

கைதட்டி பாடி மகிழ்ந்திருப்போம் கர்த்தர் சமூகத்தில் களிகூறுவோம் களிகூறுவோம் களிகூறுவோம் கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம் சொல்லி மகிழ்வோம் களிகூறுவோம் களிகூறுவோம் கவலைகள் மறந்து களிகூறுவோம் 1.   நினைப்பதற்கும் நான் ஜெபிப்பதற்கும்       அதிகமாய் செய்திடுவார் 2.   பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்       எனக்கே நீ சொந்தம் என்றார் 3.   நன்மையும் கிருபையும் நம்மைத் தொடரும்      ஜீவனுள்ள நாட்களெல்லாம் 4.   அறிவு புகட்டுவார் பாதைகாட்டுவார்      ஆலோசனை அவர் தருவார் 5.   ஆபத்துக் காலத்தில் நோக்கிக் கூப்பிட்டால்      அவர் நம்மை விடுவிப்பாரே 6.   வாலாக்காமல் அவர் தலையாக்குவார்       கீழாக்காமல் மேலாக்குவார் 7.   பெலப்படுத்தி நான் சகாயம் செய்வேன்       வலக்கரம் தாங்கும் என்றார் 8.   உள்ளங்கையில் அவர் பொறித்து உள்ளார்       அவர் உன்னை மறப்பதில்...

குதூகலம் கொண்டாட்டமே

குதூகலம் கொண்டாட்டமே என் இயேசுவின் சந்நிதானத்தில் ஆனந்தம் ஆனந்தமே என் அன்பரின் திருப்பாதத்தில் 1.   பாவமெல்லாம் பறந்தது நோய்களெல்லாம் தீர்ந்தது இயேசுவின் இரத்தத்தினால் கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்பு பரிசுத்த ஆவியினால் 2.   தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும் தேவாலயம் நாமே ஆவியான் தேவன் அச்சாரமானார் ஆதிசயம் அதிசயமே 3.   வல்லவர் என் இயேசு வாழ வைக்கும் தெய்வம் வெற்றிமேலே வெற்றி தந்தார் ஒருமனமாய் கூடி ஓசான்னா பாடி ஊரெல்லாம் கொடியேற்றுவோம் 4.   எக்காள சத்தம் தூதர்கள் கூட்டம் நேசர் வருகின்றார் ஒருநொடி பொழுதில் மறுரூபமாவோம் மகிமையில் பிரவேசிப்போம்

ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு

ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு கொடி கொடி ஸ்தோத்திரம் வாழ்வளிக்கும் இயேசு ராஜாவுக்கு வாழ் நாளெல்லாம் ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன் ஆனந்த தொனியால் உயர்த்துவேன் 1. நீதியின் கரத்தினால் தாங்கி நடத்துவார் கர்த்தரே என் பெலன் எதற்குமே அஞ்சிடேன் 2. அற்புதம் செய்பவர் அகிலம் படைத்தவர் யுத்தத்தில் வல்லவர் மீட்பர் ஜெயிக்கிறார் 3  நம்பிக்கை தேவனே நன்மைகள் அளிப்பார் வார்த்தையை அனுப்பியே மகிமைப் படுத்துவார் 4  உண்மை தேவனே உருக்கம் நிறைந்தவர் என்னை காப்பார் உறங்குவதில்லையே

வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது மகனே

வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது மகனே  பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே (2)     1.   உன்னதமான கர்த்தரையே  உறைவிடமாக்கிக் கொண்டாய்  அடைக்கலமாம் ஆண்டவனை  ஆதாயமாக்கிக் கொண்டாய்     2.   ஆட்டுக்குட்டி இரத்தத்தினால்  சாத்தானை ஜெயித்து விடடோம்  ஆவி உண்டு வசனம் உண்டு  அன்றாடம் வெற்றி உண்டு     3.   கர்த்தருக்குள் நம்பாடுகள்  ஒரு நாளும் வீணாகாது  அசையாமல் உறுதியுடன்  அதிகமாய் செயல்படுவோம்     4.   அழைத்தவரோ உண்மையுள்ளவர்  பரிசுத்தமாக்கிடுவார்  ஆவி ஆத்துமா சாPரமெல்லாம்  குற்றமின்றி காத்திடுவார்     5.   நம்முடைய குடியிருப்பு  பரலோகத்தில் உண்டு  வரப்போகும் இரட்சகரை  எதிர்நோக்கி காத்திருப்போம்     6.   அற்பமான் ஆரம்பத்தை  அசட்டை பண்ணாதே  தொடங்கினவர் முடித்திடுவார்  சொன்னதை செய்திடுவார்     7.   ஆற்றல் அல்ல சத்தி அல்ல  ஆவியினால் ஆ...

யாரிடம் செல்வோம் இறைவா

யாரிடம் செல்வோம் இறைவா வாழ்வு தரும் வார்;த்தையெல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளன இறைவா....... இறைவா....... (1)     (யாரிடம் செல்வோம் இறைவா.......) அலைமோதும் உலகினிலே ஆறுதல் நீ தரவேண்டும் (2) அண்டி வந்தோம் அடைக்கலம் நீ ஆதரித்தே அரவணைப்பாய் (1)     (யாரிடம் செல்வோம் இறைவா.......) மனதினிலே போராட்டம் மனிதனையே வாட்டுதைய்யா (2) குணமதிலே மாறாட்டம் குவலயம் தான் இணைவதெப்போ (1)     (யாரிடம் செல்வோம் இறைவா.......) வேரறுந்த மரங்களிலே விளைந்திருக்கும் கனிகளைப் போல் (2) உலகிருக்கும் நிலை கண்டு உனது மனம் இரங்காதோ (1)     (யாரிடம் செல்வோம் இறைவா.......)

வல்லமை தேவை தேவா

வல்லமை தேவை தேவா வல்லமை தாரும் தேவா இன்றே தேவை தேவா இப்போ தாரும் தேவா பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை 1.மாம்சமான யாவர் மேலும் ஆவியை ஊற்றுவேன் என்றீர் மூப்பர் வாலிபர் யாவரும் தீர்க்க தரிசனம் சொல்வாரே - பொழிந் 2.பெந்தேகோஸ்தே நாளின் போல பெரிதான முழக்கத்தோடே வல்லமையாக இறங்கி வரங்களினாலே நிரப்பும் - பொழிந் 3.மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையான ஆவியைத்தாரும் பிதாவே என்று அழைக்க புத்ர சுவிகாரம் ஈந்திடும் - பொழிந்

பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்

பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்  மலைகள் குன்றுகள் தகர்ந்திட வேண்டும்  கோணலானவை நேராகணும்  கரடானவை சமமாகணும்       ராஜா வருகிறார் ஆயத்தமாவோம் (2)       இயேசு வருகிறார் எதிர் கொண்டு செல்வோம்     1.   நல்ல கனிகொடா மரங்களெல்லாம்  வெட்டுண்டு அக்கினியில் போடப்படும்     2.   கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்து  பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே     3.   அந்நாளில் வானம் வெந்து அழியும்  பூமியெல்லாம் எரிந்து உருகிப் போகும்     4.   கரையில்லாமலே குற்றமில்லாமலே  கர்த்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம்     5.   அநுதினமும் ஜெபத்தில் விழித்திருப்போம்  அபிஷேக எண்ணெய்யால் நிரம்பிடுவோம்

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை கண்கள் கலங்கிடுதே கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால் நெஞ்சம் நெகிழ்ந்திடுதே 1. கெத்சமனே பூங்காவிலே கதறி அழும் ஓசை எத்திசையும் தொனிக்கிறதே எங்கள் மனம் திகைக்கின்றதே கண்கள் கலங்கிடுதே 2. சிலுவையில் மாட்டி வதை;தனரோ உம்மை செந்நிறம் ஆக்கினரோ அப்போதும் அவர்காய் வேண்டினீரே அன்போடு அவர்களை கண்டீரன்றோ அப்பா உம் மனம் பெரிதே 3. எம்மையும் உம்மைபோல் மாற்றிடவே உம் ஜீவன் தந்தீரன்றோ என் தலை தரைமட்டும் தாழ்த்துகின்றேன் தந்து விட்டேன் அன்பின் கரங்களிலே ஏற்று என்றும் நடத்தும்

எல்லாம் இயேசுவே

எல்லாம் இயேசுவே, -  எனக்கெல்லாமேசுவே. தொல்லைமிகு மிவ்வுலகில் -  துணை இயேசுவே  1.ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும்,  நாயனும் எனக்கன்பான ஞானமண வாளனும், 2.தந்தைதாய் இனம்ஜனம் பந்துளோர் சிநேகிதர், சந்தோட சகலயோக சம்பூரண பாக்யமும், 3.கவலையில் ஆறுதலும், கங்குலிலென் ஜோதியும், கஷ்டநோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழ்தமும், 4.போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில் ஆதரவு செய்திடுங் கூட்டாளியுமென் தோழனும், 5.அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் சம்பாத்யமும்  பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும்  6.ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும்  ஞானகீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும்.

என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம்!

என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம்!  இயம்பலாகாதே  மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்  மன்னித்து விட்டாரே  1. கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய்  மகிழ் கொண்டாடுவோம்!  நாடியே நம்மைத் தேடியே வந்த  நாதனைப் போற்றிடுவோம்  2. பாவங்கள், சாபங்கள், கோபங்கள் எல்லாம்  பரிகரித்தாரே  தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து  தேற்றியே விட்டாரே  3. அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு  அருளினதாலே  நிச்சயம் சுவாமி பற்றியே சாட்சி  பகரவேண்டியதே  4. வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல்வீட்டில்  ஜெயக்கொடியுடனே  மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற  மன்னனைத் ஸ்தோத்தரிப்போம் 

எனக்காய் ஜீவன் விட்டவரே

1. எனக்காய் ஜீவன் விட்டவரே  என்னோடிருக்க எழுந்தவரே  என்னை என்றும் வழி நடத்துவாரே  என்னை சந்திக்க வந்திடுவாரே  இயேசு போதுமே இயேசு போதுமே  எந்த நாளிலுமே எந்நிலையிலுமே  எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே  2. பிசாசின் சோதனை பெருகிட்டாலும்  சோர்ந்து போகாமல் முன் செல்லவே  உலகமும் மாமிசமும் மயங்கிட்டாலும்  மயங்கிடாமல் முன் செல்லவே  3. புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்  அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்  ஆத்துமாவை நிதம் தேற்றிடுவார்  மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார்  4. மனிதர் என்னைக் கைவிட்டாலும்  மாமிசம் அழுகி நாறிட்டாலும்  ஐஸ்வரியம் யாவும் அழிந்திட்டாலும்  ஆகாதவன் என்று தள்ளி விட்டாலும் 

ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே

ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே  ஜீவநதியே என்னில் பொங்கி பொங்கிவா  ஆசீர்வதியும் என் நேச கர்த்தரே  ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும்  1. கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலே  கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே  பள்ளத்தாக்கிலும் மலைகளிலும்  தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே  2. ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தரே  ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுமே  கனிதந்திட நான் செழித்தோங்கிட  கர்த்தரின் கரத்தில் நித்தம் கனம் பெற்றிட  3. இரட்சிப்பின் ஊற்றுக்கள் எந்தன் சபைதனிலே  எழும்பிட இந்த வேளை இரங்கிடுமே  ஆத்ம பலமும் பரிசுத்தமும்  ஆவலுடன் பெற்றிடவே வரம் தாருமே  4. திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலே  இரட்சகரின் காயங்களில் வெளிப்படுதே  பாவக் கறைகள் முற்றும் நீங்கிட  பரிசுத்த சமூகத்தில் ஜெயம் பெற்றிட

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்  உங்கள் கவலைகள் கண்ணீர்  எல்லாம் மறைந்து விடும்  கலங்காதே மகனே, கலங்காதே மகளே  என் இயேசு கைவிட மாட்டார்  1. கடந்ததை நினைத்து கலங்காதே  நடந்ததை மறந்துவிடு  கர்த்தர் புதியன செய்திடுவார்  இன்றே நீ காண்பாய்... கலங்கிடவே வேண்டாம்  2. நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்  உடைந்த உள்ளம் தாங்குகிறார்  காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்  கண்ணீர் துடைகின்றார் - (உன்)  3. திராணிக்கு மேலாக சோதிக்கப்பட  ஒருநாளும் விட மாட்டார்  தாங்கிடும் பெலன் தருவார்  தப்பி செல்ல வழி செய்வார் - (நீ)  4. நல்லதோர் போராட்டம் போராடுவோம்  விசுவாசம் காத்துக் கொள்வோம்  நீதியின் கிரீடம் நமக்கு உண்டு  நேசர் வருகையில் தந்திடுவார் - நம்  5. மாலையில் மகனே அழுகின்றாயா  காலையில் அக மகிழ்வாய்  நித்திய பேரானந்தம்  நேசரின் சமூகத்திலே  6. அக்கினியின் மேல் நடந்தாலும்  எரிந்து போக மாட்டாய்  ஆறுகளை நீ கடந்தாலும்  மூழ்கி போக மாட்டாய்  7. முழுமையாய் மனம் திரும்பிவிடு...

இரத்தக்கோட்டைக்குள்ளே நான் நுழைந்துவிட்டேன் - 172

இரத்தக்கோட்டைக்குள்ளே நான் நுழைந்துவிட்டேன்  இனி எதுவும் அணுகாது எந்தத் தீங்கும் தீண்டாது  1. நேசரின் இரத்தம் என்மேலே  நெருங்காது சாத்தான்  பாசமாய்ச் சிலுவையில் பலியானார்  பாவத்தை வென்று விட்டார்  2. இம்மட்டும் உதவின எபனேசரே  இனியும் காத்திடுவார்  உலகிலே இருக்கும் அவனைவிட  என் தேவன் பெரியவரே  3. மலைகள் குன்றுகள் விலகினாலும்  மாறாது உம் கிருபை  அனாதி சிநேகத்தால் இழுத்துக்கொண்டீர்  அணைத்த சேர்த்துக் கொண்டார்  4. தாய் தன் பிள்ளையை மறந்தாலும்  மறவாத என் நேசரே  ஆயனைப்போல நடத்துகிறார்  அபிஷேகம் செய்கின்றார்  5. தேவனே ஒளியும் மீட்புமானார்  யாருக்கு அஞ்சிடுவேன்  அவரே என் வாழ்வின் பெலனானார்  யாருக்கு பயப்படுவேன்? 

இதோ மனுஷரின் மத்தியில் - 351

இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே வாசஞ்செய்கிறாரே  1. தேவன் தாபரிக்கும் ஸ்தலமே  தம் ஜனத்தாரின் மத்தியிலாம்  தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே  கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே  2. தேவ ஆலயமும் அவரே  தூய ஒளி விளக்கும் அவரே  ஜீவனாலே தம் ஜனங்களின் தாகந்தீர்க்கும்  சுத்த ஜீவநதியும் அவரே  3. சீயோனே உன் வாசல்களை  ஜீவ தேவனே நேசிக்கிறார்  சீர் மிகுந்திடும் மெய்சுவிசேஷந்தனை.  கூறி உயர்த்திடுவோம் என்றுமே  4. முன்னோடியாம் இயேசு பரன்  மூலைக்கல்லாகி சீயோனிலே  வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை  வாஞ்சையோடு நாம் நாடிடுவோம் 5. மகிமை நிறை பூரணமே  மகா பரிசுத்த ஸ்தலமதுவே  என்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே  எங்கள் பாதங்கள் நிற்கிறதே 

எந்தன் கன்மலையானவரே...

எந்தன்   கன்மலையானவரே என்னை   காக்கும்   தெய்வம்   நீரே   வல்லமை   மாட்சிமை   நிறைந்தவரே மகிமைக்கு   பாத்திரரே  - 2 ஆராதனை   உமக்கே  - 4 உந்தன்   சிறகுகளின்   நிழலில் என்றென்றும்   மகிழச்செய்தீர் தூயவரே   என்   துணையாளரே துதிக்கு   பாத்திரரே என்   பெலவீன   நேரங்களில் உம்   கிருபை   தந்தீரைய்யா இயேசு   ராஜா   என்   பெலனானீர் எதற்கும்   பயம்   இல்லையே எந்தன்   உயிருள்ள   நாட்களெல்லாம் உம்மை   புகழ்ந்து   பாடிடுவேன் ராஜா   நீர்   செய்த   நன்மைகளை எண்ணியே   துதித்திடுவேன்