Skip to main content

பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்

பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும் 
மலைகள் குன்றுகள் தகர்ந்திட வேண்டும் 
கோணலானவை நேராகணும் 
கரடானவை சமமாகணும் 
     ராஜா வருகிறார் ஆயத்தமாவோம் (2) 
     இயேசு வருகிறார் எதிர் கொண்டு செல்வோம் 
  
1.   நல்ல கனிகொடா மரங்களெல்லாம் 
வெட்டுண்டு அக்கினியில் போடப்படும் 
  
2.   கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்து 
பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே 
  
3.   அந்நாளில் வானம் வெந்து அழியும் 
பூமியெல்லாம் எரிந்து உருகிப் போகும் 
  
4.   கரையில்லாமலே குற்றமில்லாமலே 
கர்த்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம் 
  
5.   அநுதினமும் ஜெபத்தில் விழித்திருப்போம் 
அபிஷேக எண்ணெய்யால் நிரம்பிடுவோம்

Comments

Popular posts from this blog

விசுவாசியே நீ பதறாதே - 234

கர்த்தரின் கை குறுகவில்லை 1. கர்த்தரின் கை குறுகவில்லை கர்த்தரின் வாக்கு மாறிடாதே சுத்தர்களாய் மாறிடவே சுதன் அருள் புரிந்தனரே பல்லவி விசுவாசியே நீ பதறாதே விசுவாசியே நீ கலங்காதே விசுவாசத்தால் நீதிமான் இன்றும் என்றும் பிழைப்பான் 2. திருச்சபையே நீ கிரியை செய்வாய் திவ்விய அன்பில் பெருகிடுவாய் தலைமுறையாய் தலைமுறையாய் தழைத்திட அருள் புரிவாய் --- விசுவாசியே 3. நெஞ்சமே நீ அஞ்சிடாதே தஞ்சம் இயேசு உன் அரணே தம் ஜனத்தை சீக்கிரமாய் தம்முடன் சேர்த்துக் கொள்வார் --- விசுவாசியே 4. மேகம் போன்ற வாக்குத்தத்தம் சூழ நின்றே காத்திருக்க விசுவாசத்தால் உரிமை கொள்வாய் விரைந்து முன் ஏகிடுவாய் --- விசுவாசியே

அனைத்து சமயத்து மெய்ப்பொருள்

அனைத்து சமயத்து மெய்ப்பொருள் இயேசுவே வேதங்கள் கூறிடும் கருப்பொருள் இயேசுவே மெய்ப்பொருள் இயேசுவே... உண்மை என்பது ஒன்றே ஒன்றாகும் அண்மையில் சேர்ந்திட்டால் அதுவும...

உம்மைப் போல் யாருண்டு - 361

உம்மைப் போல் யாருண்டு எந்தன் இயேசு நாதா இந்தப் பார்தலத்தில் உம்மைப் போல் யாருண்டு பாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன் தேவா தம் அன்பினால் மன்னித்தீர் --- உம்மைப் 1. ...