Skip to main content

இதோ மனுஷரின் மத்தியில் - 351

இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே வாசஞ்செய்கிறாரே 

1. தேவன் தாபரிக்கும் ஸ்தலமே 
தம் ஜனத்தாரின் மத்தியிலாம் 
தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே 
கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே 

2. தேவ ஆலயமும் அவரே 
தூய ஒளி விளக்கும் அவரே 
ஜீவனாலே தம் ஜனங்களின் தாகந்தீர்க்கும் 
சுத்த ஜீவநதியும் அவரே 

3. சீயோனே உன் வாசல்களை 
ஜீவ தேவனே நேசிக்கிறார் 
சீர் மிகுந்திடும் மெய்சுவிசேஷந்தனை. 
கூறி உயர்த்திடுவோம் என்றுமே 

4. முன்னோடியாம் இயேசு பரன் 
மூலைக்கல்லாகி சீயோனிலே 
வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை 
வாஞ்சையோடு நாம் நாடிடுவோம்

5. மகிமை நிறை பூரணமே 
மகா பரிசுத்த ஸ்தலமதுவே 
என்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே 
எங்கள் பாதங்கள் நிற்கிறதே 

Comments

Popular posts from this blog

விசுவாசியே நீ பதறாதே - 234

கர்த்தரின் கை குறுகவில்லை 1. கர்த்தரின் கை குறுகவில்லை கர்த்தரின் வாக்கு மாறிடாதே சுத்தர்களாய் மாறிடவே சுதன் அருள் புரிந்தனரே பல்லவி விசுவாசியே நீ பதறாதே விசுவாசியே நீ கலங்காதே விசுவாசத்தால் நீதிமான் இன்றும் என்றும் பிழைப்பான் 2. திருச்சபையே நீ கிரியை செய்வாய் திவ்விய அன்பில் பெருகிடுவாய் தலைமுறையாய் தலைமுறையாய் தழைத்திட அருள் புரிவாய் --- விசுவாசியே 3. நெஞ்சமே நீ அஞ்சிடாதே தஞ்சம் இயேசு உன் அரணே தம் ஜனத்தை சீக்கிரமாய் தம்முடன் சேர்த்துக் கொள்வார் --- விசுவாசியே 4. மேகம் போன்ற வாக்குத்தத்தம் சூழ நின்றே காத்திருக்க விசுவாசத்தால் உரிமை கொள்வாய் விரைந்து முன் ஏகிடுவாய் --- விசுவாசியே

அனைத்து சமயத்து மெய்ப்பொருள்

அனைத்து சமயத்து மெய்ப்பொருள் இயேசுவே வேதங்கள் கூறிடும் கருப்பொருள் இயேசுவே மெய்ப்பொருள் இயேசுவே... உண்மை என்பது ஒன்றே ஒன்றாகும் அண்மையில் சேர்ந்திட்டால் அதுவும...

உம்மைப் போல் யாருண்டு - 361

உம்மைப் போல் யாருண்டு எந்தன் இயேசு நாதா இந்தப் பார்தலத்தில் உம்மைப் போல் யாருண்டு பாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன் தேவா தம் அன்பினால் மன்னித்தீர் --- உம்மைப் 1. ...