Skip to main content

கைதட்டி பாடி மகிழ்ந்திருப்போம்

கைதட்டி பாடி மகிழ்ந்திருப்போம்
கர்த்தர் சமூகத்தில் களிகூறுவோம்
களிகூறுவோம் களிகூறுவோம்
கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம் சொல்லி மகிழ்வோம்
களிகூறுவோம் களிகூறுவோம்
கவலைகள் மறந்து களிகூறுவோம்

1.   நினைப்பதற்கும் நான் ஜெபிப்பதற்கும்
      அதிகமாய் செய்திடுவார்

2.   பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்
      எனக்கே நீ சொந்தம் என்றார்

3.   நன்மையும் கிருபையும் நம்மைத் தொடரும்
     ஜீவனுள்ள நாட்களெல்லாம்

4.   அறிவு புகட்டுவார் பாதைகாட்டுவார்
     ஆலோசனை அவர் தருவார்

5.   ஆபத்துக் காலத்தில் நோக்கிக் கூப்பிட்டால்
     அவர் நம்மை விடுவிப்பாரே

6.   வாலாக்காமல் அவர் தலையாக்குவார்
      கீழாக்காமல் மேலாக்குவார்

7.   பெலப்படுத்தி நான் சகாயம் செய்வேன்
      வலக்கரம் தாங்கும் என்றார்

8.   உள்ளங்கையில் அவர் பொறித்து உள்ளார்
      அவர் உன்னை மறப்பதில்லை - எனவே

Comments

Popular posts from this blog

விசுவாசியே நீ பதறாதே - 234

கர்த்தரின் கை குறுகவில்லை 1. கர்த்தரின் கை குறுகவில்லை கர்த்தரின் வாக்கு மாறிடாதே சுத்தர்களாய் மாறிடவே சுதன் அருள் புரிந்தனரே பல்லவி விசுவாசியே நீ பதறாதே விசுவாசியே நீ கலங்காதே விசுவாசத்தால் நீதிமான் இன்றும் என்றும் பிழைப்பான் 2. திருச்சபையே நீ கிரியை செய்வாய் திவ்விய அன்பில் பெருகிடுவாய் தலைமுறையாய் தலைமுறையாய் தழைத்திட அருள் புரிவாய் --- விசுவாசியே 3. நெஞ்சமே நீ அஞ்சிடாதே தஞ்சம் இயேசு உன் அரணே தம் ஜனத்தை சீக்கிரமாய் தம்முடன் சேர்த்துக் கொள்வார் --- விசுவாசியே 4. மேகம் போன்ற வாக்குத்தத்தம் சூழ நின்றே காத்திருக்க விசுவாசத்தால் உரிமை கொள்வாய் விரைந்து முன் ஏகிடுவாய் --- விசுவாசியே

அனைத்து சமயத்து மெய்ப்பொருள்

அனைத்து சமயத்து மெய்ப்பொருள் இயேசுவே வேதங்கள் கூறிடும் கருப்பொருள் இயேசுவே மெய்ப்பொருள் இயேசுவே... உண்மை என்பது ஒன்றே ஒன்றாகும் அண்மையில் சேர்ந்திட்டால் அதுவும...

உம்மைப் போல் யாருண்டு - 361

உம்மைப் போல் யாருண்டு எந்தன் இயேசு நாதா இந்தப் பார்தலத்தில் உம்மைப் போல் யாருண்டு பாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன் தேவா தம் அன்பினால் மன்னித்தீர் --- உம்மைப் 1. ...