Skip to main content

Posts

சிலுவை நிழலில் அனுதினம்

சிலுவை நிழலில் அனுதினம் அடியான் சாய்ந்திளைப்பாறிடுவேன் - ஆ! ஆ! சிலுவையின் அன்பின் மறைவில் கிருபையின் இனிய நிழலில் ஆத்தும நேசரின் அருகில் அடைகிறேன் ஆறுதல் மனதில் 1. பாவப் பாரச் சுமையதால் சோர்ந்தே தளர்ந்த என் ஜீவியமே – ஆ! ஆ! சிலுவையண்டை வந்ததினால் சிறந்த சந்தோஷங் கண்டதினால் இளைப்படையாது மேலோகம் ஏகுவேன் பறந்தே வேகம் 2. இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டேன் இன்னல்கள் மறந்திடுவேன் - ஆ! ஆ! திருமறை இன்னிசை நாதம் தேனிலு மினிய வேதம் தருமெனக்கனந்த சந்தோஷம் தீர்க்குமென் இதயத்தின் தோஷம் 3. எவ்வித கொடிய இடருக்கு மஞ்சேன் இயேசுவைச் சார்ந்து நிற்பேன் - ஆ! ஆ! அவனியில் வியாகுலம் வந்தால் அவரையே நான் அண்டிக்கொண்டால் அலைமிக மோதிடு மந்நாள் ஆறுதல் அளிப்பாரே சொன்னால்

நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன்

நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன் நிம்மதி நிம்மதியே ஆர்வமுடனே பாடித்துதிப்பேன் ஆனந்தம் ஆனந்தமே அடைக்கலமே அதிசயமே ஆராதனை ஆராதனை 1. உம் வல்ல செயல்கள் நினைத்து நினைத்து உள்ளமே பொங்குதையா நல்லவரே நன்மை செய்தவரே நன்றி நன்றி ஐயா வல்லவரே நல்லவரே ஆராதனை ஆராதனை 2. பலியான செம்மறி பாவங்கள் எல்லாம் சுமந்து தீர்த்தவரே பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ பாக்கியம் பாக்கியமே பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை 3. எத்தனை இன்னல்கள் என் வாழ்வில் வந்தாலும் உம்மைப் பிரியேன் ஐயா இரத்தமே சிந்தி சாட்சியாய் வாழ்வேன் நிச்சயம் நிச்சயமே இரட்சகரே இயேசு நாதா ஆராதனை ஆராதனை

இயேசு ராஜா வந்திருக்கிறார்

இயேசு ராஜா வந்திருக்கிறார் எல்லோரும் கொண்டாடுவோம் கைதட்டி நாம் பாடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம் கவலைகள் மறந்து நாம் பாடுவோம் 1. கூப்பிடு நீ பதில் கொடுப்பார் குறைகளெல்லாம் நிறைவாக்குவார் உண்மையாக தேடுவோரின் உள்ளத்தில் வந்திடுவார் 2. மனதுருக்கம் உடையவரே மன்னிப்பதில் வள்ளலவர் உன் நினைவாய் இருக்கிறார் ஓடிவா என் மகனே(ளே) 3. கண்ணீரெல்லாம் துடைத்திடுவார் கரம் பிடித்து நடத்திடுவார் எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம் இன்றே நிறைவேற்றுவார் 4. நோய்களெல்லாம் நீக்கிடுவார் நொடிப்பொழுதே சுகம் தருவார் பேய்களெல்லாம் நடுநடுங்கும் பெரியவர் திரு முன்னே – நம்ம 5. பாவமெல்லாம் போக்கிடுவார் பயங்களெல்லாம் நீக்கிடுவார் ஆவியினால் நிரப்பிடுவார் அதிசயம் செய்திடுவார் 6. கசையடிகள் உனக்காக காயமெல்லாம் உனக்காக திருஇரத்தம் உனக்காக திருந்திடு என் மகனே(ளே)!

இன்னும் நான் அழியல

இன்னும் நான் அழியல இன்னும் தோற்று போகல ஆனாலும் வாழ்கிறேனே ஏன்? ஏன்? ஏன்? போராட்டங்கள் முடியல பாடுகளும் தீரல ஆனாலும் இருக்குறேனே ஏன்? ஏன்? ஏன்? கிருபை கிருபை கிருபை கிருபை - எல்லாம் நான் இல்ல என் பெலன் இல்ல என் தாலந்தில்ல எல்லாம் கிருபை படிக்கல உயரல பட்டத்தாரி ஆகல ஆனாலும் வாழ்கிறேனே ஏன்? ஏன்? ஏன்? நிற்கிறேன் நிர்மூலமாகமலே இருக்கிறேன் ஆனாலும் நிற்கிறேனே ஏன்? ஏன்? ஏன்? அற்புதங்கள் நடக்குது அதிசயங்கள் நடக்குது வியாதியெல்லாம் மாறினது ஏன்? ஏன்? ஏன்? பாவமெல்லாம் மறைந்தது சாபமெல்லாம் உடைந்தது பரிசுத்தமாய் மாறினது ஏன்? ஏன்? ஏன்?

எந்தன் உள்ளம் புது கவியாலே

எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்க இயேசுவை பாடிடுவேன் அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம் அவரையே நேசிக்கிறேன் அல்லேலூயா துதி அல்லேலூயா - எந்தன் அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன் இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய கர்த்தரைக் கொண்டாடுவேன் சென்ற காலம் முழுவதும் காத்தாரே ஓர் சேதமும் அணுகாமல் சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக் கின்றும் சுக பெலன் அளித்தாரே - அல்லேலூயா சில வேலை இமைப்பொழுதே தம் முகத்தை சிருஷ்டிகர் மறைத்தாரே கடுங்கோபம் நீக்கி திரும்பவும் என்மேல் கிருபையும் பொழிந்தாரே - அல்லேலூயா பஞ்ச காலம் பெருகிட நேர்ந்தாலும் தாம் தஞ்சமே ஆனாரே அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும் அடைக்கலம் அளித்தாரே - அல்லேலூயா களிப்போடு விரைந்தேம்மை சேர்த்திட என் கர்த்தரே வருவாரே ஆவலோடு நாமும் வானத்தை நோக்கி அனுதினமும் காத்திருப்போம் - அல்லேலூயா

கர்த்தர் நாமம் என் புகலிடமே

கர்த்தர் நாமம் என் புகலிடமே கருத்தோடு துதித்திடுவேன்   1.   யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர் கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா  -கர்த்தர்   2.   யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர் ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே     -கர்த்தர்   3.   யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா  -கர்த்தர்   4.   யேகோவா ரூவா எங்கள் நல்ல மேய்ப்பரே ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே     -கர்த்தர்   5.   யேகோவா ஷாம்மா கூடவே இருக்கிறீர் கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா  -கர்த்தர்   6.   யேகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர் ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே     -கர்த்தர்

அன்பே கல்வாரி அன்பே

அன்பே கல்வாரி அன்பே உம்மைப் பார்க்கையிலே என் உள்ளம் உடையுதப்பா தாகம் தாகம் என்றீர் எனக்காய் ஏங்கி நின்றீர் பாவங்கள் சுமந்தீர் எங்கள் பரிகார பலியானீர் காயங்கள் பார்க்கின்றேன் கண்ணீர் வடிக்கின்றேன் தூய திரு இரத்தமே துடிக்கும் தாயுள்ளமே அணைக்கும் கரங்களிலே ஆணிகளா சுவாமி? நினைத்துப் பார்க்கையிலே நெஞ்சம் உருகுதையா நெஞ்சில் ஓர் ஊற்று நதியாய் பாயுதையா மனிதர்கள் மூழ்கணுமே மறுரூபம் ஆகணுமே

தூயாதி தூயவரே உமது புகழை - 61

தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன் பாரில் எனக்கு வேறென்ன வேண்டும் உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் - தூயாதி 1. சீடரின் கால்களைக் கழுவினவர் செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே! 2. பாரோரின் நோய்களை நீக்கினவர் பாவி என் பாவ நோய் நீக்கினீரே! 3. துயரங்கள் பாரினில் அடைந்தவரே துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே! 4. பரலோகில் இடமுண்டு என்றவரே பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே

நன்றி சொல்லுகிறோம் நாதா

நன்றி சொல்லுகிறோம் நாதா நாவாலே துதிக்கிறோம் நாதா நன்றி இயேசு ராஜா (2) 1. கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜா புதிய நாளை தந்திரே நன்றி ராஜா 2. ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா அதிசயம் செய்தீரே நன்றி ராஜா 3. வாழ்க்கையிலே ஒளிவிளக்காய் வந்தீரையா வார்த்தை என்ற மன்னாவை தந்தீரையா 4. அடைக்கலமே கேடயமே நன்றி ராஜா அன்பே என் ஆறுதலே நன்றி ராஜா 5. தனிமையிலே துணை நின்றீர் நன்றிராஜா தாயைப் போல் தேற்றினீர் நன்றிராஜா 6. சோர்ந்துபோன நேரமெல்லாம் தூக்கினீரே சுகம் தந்து இதுவரை தாங்கினீரே 7. புதுவாழ்வு தந்தீரே நன்றி ராஜா புதுபெலன் தந்தீரே நன்றி ராஜா 8. ஊழியம் தந்தீரே நன்றி ராஜா உடனிருந்து நடத்தினீரே நன்றி ராஜா

வல்லமை தாரும் தேவா - 251

வல்லமை தாரும் தேவா இன்றே தேவை தேவா இப்போ தாரும் தேவா பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை 1. மாம்சமான யாவர் மேலும் ஆவியை ஊற்றுவேன் என்றீர் மூப்பர் வாலிபர் யாவரும் தீர்க்க தரிசனம் சொல்வாரே – பொழிந்திடும் 2. பெந்தேகோஸ்தே நாளின் போல பெரிதான முழக்கத்தோடே வல்லமையாக இறங்கி வரங்களினாலே நிரப்பும் – பொழிந்திடும் 3. மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையான ஆவியைத்தாரும் பிதாவே என்று அழைக்க புத்ர சுவிகாரம் ஈந்திடும் – பொழிந்திடும்

மனதுருகும் தெய்வமே இயேசையா - 377

மனதுருகும் தெய்வமே இயேசையா மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை உம் அன்பிற்கு அளவே இல்லை அவை காலைதோறும் புதிதாயிருக்கும் 1. மெய்யாக எங்களது பாடுகளை ஏற்றுக் கொண்டு துக்கங்களை சுமந்து கொண்டீர் – ஐயா 2. எங்களுக்கு சமாதானம் உண்டுபண்ணும் தண்டனையோ உம்மேலே விழுந்ததையா – ஐயா 3. சாபமான முள்முடியை தலைமேலே சுமந்து கொண்டு சிலுவையிலே வெற்றி சிறந்தீர் – ஐயா 4. எங்களது மீறுதலால் காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர் தழும்புகளால் சுகமானோம் – உந்தன் 5. தேடிவந்த மனிதர்களின் தேவைகளை அறிந்தவராய் தினம் தினம் அற்புதம் செய்தீர் – ஐயா

இயேசு ரட்சகர் பெயரைச்

இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால் எதுவும் நடக்குமே அவர் இதயத்தோடு கலந்து விட்டால் எல்லாம் கிடைக்குமே (2) 1. வாடி கிடந்த உயிர்களெல்லாம் வாழ வைத்தாரே அவர் வாழ்வும் சத்தியம் ஜீவனுமாய் நன்மை செய்தாரே பரம பிதா ஒருவன் என்று வகுத்து சொன்னவர் இயேசு பாசம் அன்பு கருணையோடு உலகை கண்டவர் இயேசு 2. எதையும் தாங்கும் சகிப்புத் தன்மை வேண்டும் என்றவர் இயேசு நம் எல்லோருக்கும் இறைவனாக விளங்குகின்றவர் இயேசு தீமை வளரும் எண்ணம் தன்னை அகற்ற சொன்னவர் இயேசு தூய்மை நிறைந்த உள்ளத்தோடு பழகச் சொன்னவர் இயேசு

இடைவிடா நன்றி உமக்குத்தானே - 577

இடைவிடா நன்றி உமக்குத்தானே இணையில்லா தேவன் உமக்குத்தானே – (2) 1. என்ன நடந்தாலும் நன்றி ஐயா யார் கைவிட்டாலும் நன்றி ஐயா – (2) நன்றி நன்றி --- இடைவிடா 2. தேடி வந்தீரே நன்றி ஐயா தெரிந்துக் கொண்டீரே நன்றி ஐயா – (2) நன்றி நன்றி --- இடைவிடா 3. நிம்மதி தந்தீரே நன்றி ஐயா நிரந்தரம் ஆனீரே நன்றி ஐயா – (2) நன்றி நன்றி --- இடைவிடா 4. என்னைக் கண்டீரே நன்றி ஐயா கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா – (2) நன்றி நன்றி --- இடைவிடா 5. நீதி தேவனே நன்றி ஐயா வெற்றி வேந்தனே நன்றி ஐயா – (2) நன்றி நன்றி --- இடைவிடா 6. அநாதி தேவனே நன்றி ஐயா அரசாளும் தெய்வமே நன்றி ஐயா - (2) நன்றி நன்றி --- இடைவிடா 7. நித்திய இராஜாவே நன்றி ஐயா சத்திய தீபமே நன்றி ஐயா - (2) நன்றி நன்றி --- இடைவிடா

காக்கும் கரங்கள் உண்டெனக்கு

காக்கும் கரங்கள் உண்டெனக்கு காத்திடுவார் கிருபையாலே அல்லேலூயா பாடிப்பாடி அலைகளை நான் தாண்டிடுவேன் நம்பி வா இயேசுவை! நம்பி வா இயேசுவை! 2. நிந்தனைகள் போராட்டம் வந்தும் நீதியின் தேவன் தாங்கினாரே நேசக்கொடி என் மேல் பறக்க நேசர் உமக்காய் ஜீவித்திடுவேன் 3. கன்மலைகள் பெயர்க்கும் படியாய்க் கர்த்தர் என்னைக் கரம் பிடித்தார் காத்திருந்து பெலன் அடைந்து கழுகு போல எழும்பிடுவேன் 4. அத்திமரம் துளிர்விடாமல் ஆட்டுமந்தை முதல் அற்றாலும் கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை நம்புவேன் இயேசுவை! நம்புவேன் இயேசுவை!

மகனே உன் நெஞ்செனக்குத்

மகனே உன் நெஞ்செனக்குத் தாராயோ? – மோட்ச வாழ்வைத் தருவேன், இது பாராயோ? சரணங்கள் 1. அகத்தின் அசுத்தமெல்லாம் துடைப்பேனே - பாவ அழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே --- மகனே 2. உன் பாவம் முற்றும் பரி கரிப்பேனே – அதை உண்மையாய் அகற்ற யான் மரித்தேனே --- மகனே 3. பாவம் அனைத்துமே விட்டோடாயோ? – நித்ய பரகதி வாழ்வை இன்றே தேடாயோ? --- மகனே 4. உலக வாழ்வினை விட்டகல்வாயே - மகா உவப்பாய்க் கதி ஈவேன் மகிழ்வாயே --- மகனே 5. உன்றன் ஆத்துமத்தை நீ படைப்பாயே – அதில் உன்னதன் வசிக்க இடம் கொடுப்பாயே --- மகனே

எந்த நிலையில் நானிருந்தாலும் - 938

எந்த நிலையில் நானிருந்தாலும் என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே என் தேவன் ஒருவரே நோயாளியாய் நானிருந்தால் பலர் வெறுப்பார்கள் என் நோய்களையே சொல்லி சொல்லி நோகடிப்பார்கள் கடனாளியாய் நானிருந்தால் பலர் வெறுப்பார்கள் என் கடன்களையே சொல்லி சொல்லி கலங்க வைப்பார்கள் பட்டம் படிப்பு இல்லாவிட்டால் பலர் வெறுப்பார்கள் வெறும் பட்ட மரம் என்று சொல்லி பரிகசிப்பார்கள் அனாதையாய் நானிருந்தால் பலர் வெறுப்பார்கள் அன்பு வேண்டுமா என்று சொல்லி அலைய வைப்பார்கள்

ஒரு தாய் தேற்றுவதுபோல் - 431

ஒரு தாய் தேற்றுவதுபோல் ஒரு தாய் தேற்றுவது போல் என் நேசர் தேற்றுவார் – அல்லேலூயா (4) 1. மார்போடு அணைப்பாரே மனக்கவலை தீர்ப்பாரே 2. கரம்பிடித்து நடத்துவார் கன்மலை மேல் நிறுத்துவார் 3. எனக்காக மரித்தாரே என் பாவம் சுமந்தாரே 4. ஒரு போதும் கைவிடார் ஒரு நாளும் விலகிடார்

கர்த்தாவே தேவர்களில்

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார் வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் (2) உமக்கொப்பானவர் யார் உமக்கொப்பானவர் யார் வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் 1. செங்கடலை நீர் பிளந்து உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர் (2) நீர் நல்லவர் சர்வ வல்லவர் என்றும் வாக்கு மாறாதவர் (2) 2. தூதர்கள் உண்ணும் உணவால் உந்தன் ஜனங்களை போஷித்தீரே (2) உம்மைப் போல யாருண்டு இந்த ஜனங்களை நேசித்திட (2) 3. கன்மலையை நீர் பிளந்து உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர் (2) உம் நாமம் அதிசயம் இன்றும் அற்புதம் செய்திடுவீர் (2)

தேவா நான் எதினால் விசேஷித்தவன் - 26

தேவா நான் எதினால் விசேஷித்தவன் ராஜா நான் அதை தினம் யோசிப்பவன் எதினால் இது எதினால் நீர் என்னோடு வருவதினால் எதினால் இது எதினால் நீர் என்னோடு இருப்பதினால் 1. மேகஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது பாதை காட்ட பகலெல்லாம் கூட செல்லுது அன்பான தேவன் என்னோடு வருவார் அது போதும் என் வாழ்விலே --- தேவா 2. தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குது ஆவல் கொண்ட கன்மலையும் கூட செல்லுது என் ஏக்கம் எல்லாம் என் தேவன் தீர்ப்பார் சந்தோஷம் நான் காணுவேன் --- தேவா 3. வாழ்க்கையில் கசப்புகள் கலந்திட்டாலும் பாசமுள்ள ஒருமரம் கூடவருது மாராவின் நீரை தேனாக மாற்றும் என் நேசர் என்னோடுண்டு --- தேவா

உறக்கம் தெளிவோம்

உறக்கம் தெளிவோம் பல்லவி  உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம் உலகத்தின் இறுதிவரை கல்வாரித் தொனிதான் மழை மாறி பொழியும் நாள்வரை உழைத்திடுவோம்  சரணங்கள் 1. அசுத்தம் களைவோம்  அன்பை அழைப்போம்  ஆவியில் அனலும் கொள்வோம் அவர் படை ஜெயிக்க நம்மிடை கருத்து வேற்றுமையின்றி வாழ்வோம் --- உறக்கம் 2. அச்சம் தவிர்ப்போம்  தைரியம் கொள்வோம்  சரித்திரம் சாட்சி கூறும் இரத்தச் சாட்சிகள் நம்மிடை தோன்றி நாதனுக்காய் மடிவோம் --- உறக்கம் 3. கிறிஸ்துவுக்காய் இழந்தவர் எவரும்  தரித்திரர் ஆனதில்லை இராஜ்ய மேன்மைக்காய் கஷ்டம் அடைந்தோர் நஷ்டப்பட்டதிலை --- உறக்கம் 4. உயிர் பெறுவீர் ஒன்று கூடுவீர்  உலர்ந்த எலும்புகளே நீங்கள் அறியா ஒருவர் உங்கள் நடுவில் வந்துவிட்டார் --- உறக்கம்

என்னை மறவா இயேசு நாதா

என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் 1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள் வரைந்தெனக்காய் தந்ததாலே ஸ்தோத்திரம் ஆபத்திலே அரும் துணையே பாதைக்கு நல்ல தீபமதே 2. பயப்படாதே வலக்கரத்தாலே பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம் பாசம் என்மேல் நீர் வைத்ததினால் பறிக்க இயலாதெவருமென்னை 3. தாய் தன் சேயை மறந்து விட்டாலும் மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம் வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில் உன்னதா எந்தன் புகலிடமே 4. உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத் தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம் அக்கினியின் மதிலாக அன்பரே என்னைக் காத்திடுமே 5. என்னை முற்றும் ஒப்புவித்தேன் ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம் எப்படியும் உம் வருகையிலே ஏழை என்னைச் சேர்த்திடும்.

உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே

உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே உம்மையன்றி யாரைப்பாடுவேன் – ஏசையா உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே சரணங்கள் 1. பரிசுத்தமே பரவசமே பரனேசருளே வரம் பொருளே தேடினதால் கண்டடைந்தேன் பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் — உம்பாதம் 2. புது எண்ணெய்யால் புது பெலத்தால் புதிய கிருபை புது கவியால் நிரப்பி நிதம் நடத்துகின்றீர் நூதன சாலேமில் சேர்த்திடுவீர் — உம்பாதம் 3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் நெருங்கி உதவி எனக்களித்தீர் திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல் தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் — உம்பாதம் 4. என் முன் செல்லும் உம் சமூகம் எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல் உமது கோலும் உம் தடியும் உண்மையாய் என்னையும் தேற்றிடுதே — உம்பாதம் 5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும் கொடியாய் அடியேன் படர்ந்திலங்க கிளை நறுக்கிக் களை பிடுங்கி கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் — உம்பாதம் 6. என் இதய தெய்வமே நீர் எனது இறைவா ஆருயிரே நேசிக்கிறேன் இயேசுவே உம் நேசமுகம் என்று கண்டிடுவேன் — உம்பாதம் 7. சீருடனே பேருடனே சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில் சீக்கிரமாய் சேர்த்திடுவீர் சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் — உம்பாதம்

ஏறுகின்றார் தள்ளாடித் தவழ்ந்து களைப்போடே

ஏறுகின்றார் தள்ளாடித் தவழ்ந்து களைப்போடே என் இயேசு குருசை சுமந்தே என் நேசர் கொல்கொதா மலையின்மேல் நடந்தே ஏறுகின்றார் 1.கன்னத்தில் அவன் ஓங்கி அடிக்கச் சின்னப் பிள்ளைபோல் ஏங்கி நின்றார் அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி ஆண்டவரை அனுப்புகின்றான் - ஏறு 2.மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே நெஞ்சைப் பிளந்தான் ஆ! கொடுமை இரத்தமும் நீரும் ஓடி வருதே இரட்சகரை நோக்கியே பார் - ஏறு 3.இந்தப்பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்ச் சொந்தப்படுத்தி ஏற்றுக்கொண்டார் நேசிக்கின்றாயோ இயேசு நாதரை நேசித்து வா குருசெடுத்தே - ஏறு 4.சேவல் கூவிடும் மூன்று வேளையும் சொந்த குருவை மறுதலித்தான் ஓடி ஒளியும் பேதுருவையும் தேடி அன்பாய் நோக்குகின்றார் - ஏறு 5.பின்னே நடந்த அன்பின் சீஷன்போல் பின்பற்றி வா சிலுவை வரை காடியைப் போல் கசந்திருக்கும் கஷ்டங்களை அவரிடம் சொல் - ஏறு 6.செட்டைகளின் கீழ் சேர்த்தனைத்திடும் சொந்தத் தாயின் அன்பிதுவே எருசலமே! எருசலமே! என்றழுதார் கண் கலங்க - ஏறு

குயவனே குயவனே படைப்பின் காரணனே - 200

குயவனே குயவனே படைப்பின் காரணனே களிமண்ணான என்னையுமே கண்ணோக்கிப் பார்த்திடுமே 1.வெறுமையான பாத்திரம் நான் வெறுத்துத் தள்ளாமலே நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்யுமே வேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம் இயேசுவை போற்றிடுதே என்னையும் அவ்விதப் பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே 2.விலைபோகாத பாத்திரம் நான் விரும்புவாரில்லையே விலையில்லா உம் கிருபையால் உகந்ததாக்கிடுமே தடைகள் யாவும் நீக்கி என்னைத் தம்மைப் போல் மாற்றிடுமே உடைத்து என்னை உந்தனுக்கே உடைமையாக்கிடுமே 3.மண்ணாசையில் நான் மயங்கியே மெய்வழி விட்டகன்றேன் கண்போன போக்கைப் பின்பற்றினேன் கண்டேனில்லை இன்பமே காணாமல்போன பாத்ரம் என்னைத் தேடிவந்த தெய்வமே வாழ்நாளெல்லாம் உம்பாதம் சேரும் பாதையில் நடத்திடுமே

தேவப் பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ

தேவப் பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே ஆவலதாய் எனைப் பைம்புல்மேல் அவர் மேய்த் தமர் நீர் அருளுகின்றார் 1. ஆத்துமத் தன்னைக் குளிரப்பண்ணி அடியேன் கால்களை நீதி என்னும் நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம் நிதமும் சுகமாய் நடத்துகின்றார் 2. சாநிழல் பள்ளத் திறங்கிடினும் சற்றும் தீங்கு கண்டஞ்சேனே வானபரன் என்னோடிருப்பார் வளை தடியும் கோலுமே தேற்றும் 3. பகைவர்க் கெதிரே ஒரு பந்தி பாங்காய் எனக்கென் றேற்படுத்திச் சுக தயிலம் கொண்டென் தலையைச் சுபமாய் அபிஷேகம் செய்குவார் 4. ஆயுள் முழுவதும் என் பாத்ரம் அருளும் நலமுமாய் நிரம்பும் நேயன் வீட்டினில் சிறப்போடே நெடுநாள் குடியாய் நிலைத்திருப்பேன

குதூகலம் கொண்டாட்டமே - 964

குதூகலம் கொண்டாட்டமே என் இயேசுவின் சந்நிதானத்தில் ஆனந்தம் ஆனந்தமே என் அப்பாவின் திருப்பாதத்தில் 1. பாவமெல்லாம் பறந்தது நோய்களெல்லாம் தீர்ந்தது இயேசுவின் இரத்தத்தினால் கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்பு பரிசுத்த ஆவியினால் 2. தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும் தேவாலயம் நாமே ஆவியான தேவன் அச்சாரமானார் அதிசயம் அதிசயமே 3. வல்லவர் என் இயேசு வாழ வைக்கும் தெய்வம் வெற்றிமேலே வெற்றி தந்தார் ஒருமனமாய் கூடி ஓசன்னா பாடி ஊரெல்லாம் கொடியேற்றுவோம் 4. எக்காள சத்தம், தூதர்கள் கூட்டம் நேசர் வருகின்றார் ஒருநொடி பொழுதில் மறுரூபமாவோம் மகிமையில் பிரவேசிப்போம்

கால் மிதிக்கும் தேசமெல்லாம்-என் - 963

கால் மிதிக்கும் தேசமெல்லாம்-என் கர்த்தருக்கு சொந்தமாகும் கண்பார்க்கும் பூமியெல்லாம் கல்வாரி கொடிபறக்கும் 1. பறக்கட்டும் பறக்கட்டும் சிலுவையின் ஜெயக்கொடி-அல்லேலூயா உயரட்டும் உயரட்டும் இயேசுவின் திருநாமம்-அல்லேலூயா 2. எழும்பட்டும் எழும்பட்டும் கிதியோனின் சேனைகள் முழங்கட்டும் முழங்கட்டும் இயேசுதான் வழியென்று 3. செல்லட்டும் செல்லட்டும் ஜெபசேனை துதிசேனை வெல்லட்டும் வெல்லட்டும் எதிரியின் எரிகோவை 4. திறக்கட்டும் திறக்கட்டும் சவிசேஷ வாசல்கள் வளரட்டும் வளரட்டும் அபிஷேக திருச்சபைகள்

கலங்காதே கலங்காதே - 958

கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார் முள்முடி உனக்காக இரத்தமெல்லாம் உனக்காக பாவங்களை அறிக்கையிடு பரிசுத்தமாகி விடு நீ கல்வாரி மலைமேலே காயப்பட்ட இயேசுவைப் பார் கரம் விரித்து அழைக்கின்றார் கண்ணீரோடு ஓடி வா நீ காலமெல்லாம் உடன் இருந்து கரம்பிடித்து நடத்திச் செல்வார் கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணி போல் காத்திடுவார் உன்னை உலகத்தின் வெளிச்சம் நீ எழுந்து ஒளி வீசு மலைமேல் உள்ள பட்டணம் – தம்பி (நீ) மறைவாக இருக்காதே உலகம் உன்னை வெறுத்திடலாம் உற்றார் உன்னைத் துரத்திடலாம் உன்னை அழைத்தவரோ உள்ளங்கையில் ஏந்திடுவார் உன் நோய்கள் சுமந்து கொண்டார் உன் பிணிகள் ஏற்றுக் கொண்டார் நீ சுமக்கத் தேவையில்லை விசுவாசி அது போதும்

உந்தன் நாமம் மகிமை பெற

உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவே உந்தன் அரசு விரைவில் வரவேண்டும் கர்த்தாவே – ஜெபிக்கிறோம் நாங்கள் துதிக்கிறோம் 1. இந்தியா இரட்சகரை அறிய வேண்டுமே இருளில் உள்ளோர் வெளிச்சத்தையே காண வேண்டுமே 2. சாத்தான் கோட்டை தகர்ந்து விழ வேண்டுமே சாபம் நீங்கி சமாதானம் வரணுமே 3. கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் அழுகிறோம் கரம்விரித்து உம்மை நோக்கி பார்க்கிறோம் 4. சிலுவை இரத்தம் தெளிக்கப்பட வேண்டுமே ஜீவநதி பெருகியோட வேண்டுமே 5. ஜெபசேனை எங்கும் எழும்ப வேண்டுமே உபவாச கூட்டம் பெருக வேண்டுமே

உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை

உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை அப்பானு கூப்பிடவா உம்மை அம்மானு கூப்பிடவும் ஆசை அம்மானும் கூப்பிடவா (2) உம்மை அப்பானு கூப்பிடவா உம்மை அம்மானும் கூப்பிடவா 1. கருவில் என்னை காத்தத பார்த்தா அம்மானு சொல்லனும் உம் தோளில் என்னை சுமப்பதை பார்த்தா அப்பானு சொல்லனும் என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா அம்மானு சொல்லனும் என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா அப்பானு சொல்லனும் – உம்மை அப்பானு கூப்பிடவா… 2. என் கண்ணீரை துடைப்பதை பார்த்தா அம்மானு சொல்லனும் என் விண்ணப்பத்தை கேட்பதை பார்த்தா அப்பானு சொல்லனும் என்னை ஏந்துவதும் தாங்குவதும் பார்த்தா அம்மானு சொல்லனும் உம் இரக்கத்தை உருக்கத்தை பார்த்தா அப்பானு சொல்லனும் – உம்மை அப்பானு கூப்பிடவா…

திருக்கரத்தால் தாங்கி என்னை

திருக்கரத்தால் தாங்கி என்னை திருச்சித்தம் போல் நடத்திடுமே குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் வனைந்திடுமே . 1. உம் வசனம் தியானிக்கையில் இதயமதில் ஆறுதலே காரிருளில் நடக்கையிலே தீபமாக வழி நடத்தும் 2. ஆழ்கடலில் அலைகளினால் அசையும்போது என் படகில் ஆத்ம நண்பர் இயேசு உண்டே சேர்ந்திடுவேன் அவர் சமூகம் 3. அவர் நமக்காய் ஜீவன் தந்து அளித்தனரே பெரிய மீட்பு கண்களினால் காண்கிறேனே இன்பக் கானான் தேசமதை

உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு

உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு (2) என் யேசையா அல்லேலுயா என் யேசையா அல்லேலுயா -2 இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே (2) எவ்வேளையும் ஐயா நீர்தானே – 2 என் சிநேகமும் நீரே என் ஆசையும் நீரே (2) என் எல்லாமே ஐயா நீர்தானே – 2 இம்மையிலும் நீரே மறுமையிலும் நீரே (2) எந்நாளுமே ஐயா நீர்தானே-2

உம்மோடு இருக்கணுமே ஐயா

உம்மோடு இருக்கணுமே ஐயா உம்மைப் போல் மாறணுமே உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து வெளிச்சம் கொடுக்கணுமே 1. ஓடும் நதியின் ஓரம் வளரும் மரமாய் மாறணுமே எல்லா நாளும் இலைகளோடு கனிகள் கொடுக்கணுமே 2. உலகப் பெருமை இன்பமெல்லாம் குப்பையாய் மாறணுமே உம்மையே என் கண்முன் வைத்து ஓடி ஜெயிக்கணுமே 3. ஆத்ம பார உருக்கத்தோடு அழுது புலம்பணுமே இரவும் பகலும் விழித்து ஜெபிக்கும் மேய்ப்பன் ஆகணுமே – நான் 4. பேய்கள் ஓட்டும் வல்லமையோடு பிரசங்கள் பண்ணணுமே கடினமான பாறை இதயம் உடைத்து நொறுக்கணுமே – நான் 5. வார்த்தை என்னும் வாளையேந்தி யுத்தம் செய்யணுமே விசுவாசம் என்னும் கேடயத்தால் பிசாசை வெல்லணுமே – நான்

பரிசுத்தர் கூட்டம் நடுவில்

பரிசுத்தர் கூட்டம் நடுவில் ஜொலித்திடும் சுத்த ஜோதியே அரூபியே இவ்வேளையில் அடியார் நெஞ்சம் வாரீரோ 1. மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ? கல் தின்னக் கொடுக்கும் பெற்றோர் உண்டோ? பொல்லாதோர் கூட செய்திடார் நற்பிதா நலம் அருள்வார் 2. சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே விரும்பா அசுத்தம் யாவும் போக்குமே பாவி நீசப்பாவி நானையா தேவா இரக்கம் செய்ய மாட்டீரோ? 3.பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை யாரும் காணா உள்ளலங்கோலத்தை மனம் நொந்து மருளுகின்றேன் பரிசுத்தம் கெஞ்சுகின்றேன் 4.துணை வேண்டும் தகப்பனே உலகிலே என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே என் ஜீவன் எல்லையெங்கிலும் பரிசுத்தம் என எழுதும்

என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்

என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் என் உயிரான உயிரான உயிரான இயேசு 1. உலகமெல்லாம் மறக்குதையா உணர்வு எல்லாம் இனிக்குதையா உம் நாமம் துதிக்கையிலே இயேசையா உம் அன்பை ருசிக்கையிலே 2. உம் வசனம் எனக்கு உணவாகும் உடலுக்கெல்லாம் மருந்தாகும் இரவும் பகலுமையா உந்தன் வசனம் தியானிக்கிறேன் 3. உம் திரு நாமம் உலகத்திலே உயர்ந்த அடைக்கல அரண்தானே நீதிமான் உமக்குள்ளே ஓடி சுகமாய் இருப்பானே

கிருபையால், நிலை நிற்கின்றோம்

கிருபையால், நிலை நிற்கின்றோம் உம் கிருபையால், நிலை நிற்கின்றோம் கிருபை - (7) --- கிருபையால் 1. பெயர் சொல்லி அழைத்தது, உங்க கிருபை பெரியவனாக்கியதும், உங்க கிருபை கிருபை - (7) --- கிருபையால் 2. நீதிமானாய் மாற்றியது, உங்க கிருபை நித்தியத்தில் சேர்ப்பது, உங்க கிருபை கிருபை - (7) --- கிருபையால் 3. கட்டுகளை நீக்கினது, உங்க கிருபை காயங்களை கட்டியதும், உங்க கிருபை கிருபை - (7) --- கிருபையால் 4. வல்லமையை அளித்தது, உங்க கிருபை வரங்களை கொடுத்தது, உங்க கிருபை கிருபை - (7) --- கிருபையால் 5. கிருபையை, கொண்டாடுகிறோம் தேவ கிருபையை, கொண்டாடுகிறோம் கிருபை - (7) --- கிருபையால்

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே உம் வார்த்தையிலே சுகம் உம் வார்த்தையிலே மதுரம் உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம் 1.மாராவின் தண்ணீரெல்லாம் மதுரமாக மாறிப்போகும் கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - நீர் 2.இருளான வாழ்க்கை எல்லாம் ஒளியாக மாறிப்போகும் கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - நீர் 3.எரிகோவின் தடைகள் எல்லாம் துதிகளாலே மாறிப்போகும் கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - நீர் 4.வியாதிகள் வறுமையெல்லாம் விசுவாசத்தால் மாறிப்போகும் கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - நீர்

நன்றி பலி பீடம் கட்டுவோம்

நன்றி பலி பீடம் கட்டுவோம் நல்ல தெய்வம் நன்மை செய்தார் செய்த நன்மை ஆயிரங்கள் சொல்லிச் சொல்லி பாடுவேன் நன்றி தகப்பனே நன்மை செய்தீரே ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர் பாவம் நீங்கிட கழுவி விட்டீர் உமக்கென்று வாழ பிரித்தெடுத்து உமது ஊழியம் செய்ய வைத்தீர் இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர் இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டீர் உமக்கு சொந்தமாய் வாங்கிக் கொண்டு உரிமைச் சொத்தாக வைத்துக் கொண்டீர் பார்க்கும் கண்களை தந்தீரய்யா பாடும் உதடுகள் தந்தீரய்யா உழைக்கும் கரங்களை தந்தீரய்யா ஓடும் கால்களைத் தந்தீரய்யா நல்ல குடும்பம் நீர் தந்தீரய்யா செல்ல பிள்ளைகள் தந்தீரய்யா அணைக்கும் கணவனை தந்தீரய்யா அன்பு மனைவியை தந்தீரய்யா இருக்க நல்ல ஒரு வீடு தந்தீர் வாழத் தேவையான வசதி தந்தீர் கடுமையாக தினம் உழைக்க வைத்தீர் கடனே இல்லாமல் வாழ வைத்தீர் புதிய உடன்பாட்டின் அடையாளமாய் புனித இரத்தம் ஊற்றினீரே சத்திய ஜீவ வார்த்தையாலே மரித்த வாழ்வையே மாற்றினீரே எதிராய் வாழ்ந்து வந்த இவ்வுலகை ஒப்புரவாக்கினீர் உம் இரத்தத்தால் தூரம் வாழ்ந்து வந்த எங்களையே அருகில் கொண்டுவந்தீர் ஆவியினால் குற்றம் செய்ததால் மரித்திருந்தோம் இயேசுவோடே...

உன்னை அதிசயம் காணச் செய்வேன்

உன்னை அதிசயம் காணச் செய்வேன் நீ அற்புதம் கண்டிடுவாய் இன்று வாக்களித்தார் தேவன் இன்று நிறைவேற்ற வந்து விட்டார் --- உன்னை 1. வழிதிறக்கும் அதிசயம் நடந்திடுமே செங்கடலும் திறந்தே வழிவிடுமே தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே இடைஞ்சலெல்லாம் இன்றே மறைந்திடுமே --- உன்னை 2. குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே இறைமகனாம் இயேசுவால் நடந்திடுமே வாதையெல்லாம் மறைந்தே போகுமே பாதையெல்லாம் நெய்யாய் பொழிந்திடுமே --- உன்னை 3. வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே காரிருளில் பேரொளி வீசிடுமே வனாந்திரமே வழியாய் வந்தாலும் வல்லவரின் கரமே நடத்திடுமே --- உன்னை

இஸ்ரவேல் என் ஜனமே - 233

இஸ்ரவேல் என் ஜனமே என்றும் இடறிட வேண்டாம் யேகோவா உன் தெய்வமானால் ஏதும் பயம் வேண்டாம் 1. ஓங்கும் புயமும் பலத்த கரமும் உன் பக்கமே யுண்டு தாங்கும் கிருபை தயவு இரக்கம் தாராளமாயுண்டு – இஸ்ரவேல் 2. பார்வோன் கைக்கு விடுத்து மீட்ட பஸ்கா ஆட்டுக்குட்டி ஆரோன் மோசே என்னும் நல்ல ஆசாரியர் உண்டு – இஸ்ரவேல் 3. செங்கடலில் வழி திறந்த சீயோன் நாயகனே பங்கமின்றி பாலைவனத்தில் பராமரித்தாரே – இஸ்ரவேல் 4. சத்துருக்களை சிதற அடித்த சர்வ வல்ல தேவன் யுத்தத்தில் உன் முன்னே சென்று ஜெயமெடுத்தாரே – இஸ்ரவேல் 5. பயப்படாதே சிறு மந்தையே பார் நான் உன் மேய்ப்பன் தயங்காதே மனம் கலங்காதே உன் தேவன் தினம் காப்பேன் – இஸ்ரவேல்

நீரின்றி வாழ்வேது இறைவா- 974

நீரின்றி வாழ்வேது இறைவா உம் நினைவின்றி மகிழ்வேது தேவா உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும் உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும் பல கோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும் இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும் ஒராயிரம் ஜீவன் உயிர் வாழுமே உம் வார்த்தையில் உண்டு அற்புதமே கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர் அதற்குள்ளும் ஜீவனை தந்தவர் நீர் உமையன்றி அனு வேதும் அசையாதையா உம் துணையின்றி உயிர் வாழ முடியாதைய்யா எத்தனை நன்மைகள் செய்தீரையா அதில் எதற்கென்று நன்றி சொல்லி துதிப்பேன் ஐயா அத்தனையும் சொல்ல வேண்டும் என்றால் ஆயிரம் ஆண்டுகள் போதாதையா

இயேசு கூட வருவார் - 986

இயேசு கூட வருவார் எல்லாவித அற்புதம் செய்வார் தந்தான தந்தனத்தானானா – 2 1. நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார் நொந்துபோன உள்ளத்தை தேற்றிடுவார் 2. வேதனை துன்பம் நீக்கிடுவார் சமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார் 3. கடன்தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார் கண்ணீர்கள் அனைத்தையும் துடைத்திடுவார் 4. எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவேன் எதிரியான சாத்தானை முறியடிப்பேன்

அனாதி தேவன் உன் - 472

அனாதி தேவன் உன் அடைக்கலமே அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே இந்த தேவன் என்றென்றுமுள்ள சதா காலமும் நமது தேவன் மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் 1. காருண்யத்தாலே இழுத்துக் கொண்டார் தூய தேவ அன்பே இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை இனிதாய் வருந்தி அழைத்தார் --- இந்த 2. கானகப் பாதை காரிருளில் தூய தேவ ஒளியே அழுகை நிறைந்த பள்ளத் தாக்குகளை அரும் நீரூற்றாய் மாற்றினாரே --- இந்த 3. கிருபை கூர்ந்து மன துருகும் தூய தேவ அன்பே உன் சமாதானத்தின் உடன்படிக்கைகளை உண்மையாய் கர்த்தர் காத்துக்கொள்வார் --- இந்த 4. இப்புவி யாத்திரை கடந்திடுவாய் தூய தேவ தயவால் கடும் கானகத்தில் கர்த்தர் மார்பினிலே கிடைக்கும் இளைப்பாறுதலே --- இந்த 5. வறண்ட வாழ்க்கை செழித்திடுமே தூய தேவ அருளால் நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும் சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம் --- இந்த 6. ஆனந்தம் பாடித் திரும்பியே வா தூய தேவ பெலத்தால் சீயோன் பர்வதம் உன்னைச் சேர்த்திடுவார் சந்ததம் மகிழ்ச்சி அடைவாய் --- இந்த

திக்கற்ற பிள்ளைகளுக்கு - 780

திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ தனிமையான எனக்கு சகாயர் நீரே அல்லவோ ஆதரவற்ற எனக்கு பக்க பலம் நீரே அல்லவோ என்றைக்கும் மறைந்திருப்பீரோ தூரத்தில் நின்று விடுவீரோ பேதைகளை மறப்பீரோ இயேசுவே மனமிரங்கும் கர்த்தாவே எழுந்தருளும் கை தூக்கி என்னை நிறுத்தும் தீமைகள் என்னை சூழும் நேரம் தூயவரே இரட்சியும் தாய் என்னை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை ஏழையின் ஜெபம் கேளும் இயேசுவே மனமிரங்கும்

ஆராதிக்க கூடினோம் - 84

ஆராதிக்க கூடினோம் ஆர்ப்பரித்து பாடிடுவோம் வல்ல இயேசு நல் தேவன் என்றென்றும் அவர் நம் தேவன் 1.தேவ வாசஸ்தலம் என்றும் இன்பமானதே மகிமை தேவன் கிறிஸ்து இயேசு பிரசன்னம் இங்கே மகிமை மகிமையே! என் மனம் பாடுதே மக்கள் மத்தியில் என் மகிழ்ச்சி பொங்குதே! 2.சீயோன் பெலனே! வெற்றி சிகரமே! சேனைகளின் கர்த்தர் இயேசு கிரியை செய்கிறார் ஜீவன் பெலனும் ஆசீர்வாதமே நித்திய ஜீவன் இன்றும் என்னில் ஓங்கி நிற்குதே! 3. கர்த்தர் சமூகம் என் வாழ்வின் மேன்மையே கர்த்தர் இயேசு ராஜன் என்றும் உயர்ந்து நிற்கிறார் அல்லேலூயா என் ஆவி பாடுதே ஆராதனை அழகு என்னை கவர்ந்து கொண்டதே! 4.தேவ சாயல் சபையில் தோன்றுதே தேவர் நடுவில் இயேசு நியாயம் செய்கிறார் தேவ சேவையே என் கெம்பீர சேவை தேவாவியில் நிறைந்து ஆடிப்பாடுவேன்

விடுதலை நாயகன் வெற்றியைத் - 101

விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார் எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம் 1. நான் பாடிப்பாடி மகிழ்வேன் – தினம் ஆடி ஆடித்துதிப்பேன் – எங்கும் ஓடி ஓடி சொல்லுவேன் என் இயேசு ஜீவிக்கிறார் 2. அவர் தேடி ஓடி வந்தார் என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார் என் பாவம் அனைத்தும் மன்னித்தார் புது மனிதனாக மாற்றினார் 3. அவர் அன்பின் அபிஷேகத்தால் என்னை நிரப்பி நடத்துகின்றார் சாத்தானின் வல்லமை வெல்ல அதிகாரம் எனக்குத் தந்தார் 4. செங்கடலைக் கடந்து செல்வேன் யோர்தானை மிதித்து நடப்பேன் எரிகோவை சுற்றி வருவேன் எக்காளம் ஊதி ஜெயிப்பேன்

சிலுவையில் நிழலில் - 381

சிலுவையில் நிழலில் அனுதினம் அடியான் சாய்ந்திளைப் பாரிடுவேன் - ஆ ஆ சிலுவையின் அன்பின் மறைவில் கிருபையின் இனிய நிழலில் ஆத்தும நேசரின் அருகில் அடைகிறேன் ஆறுதல் மனத...

உந்தன் நாமம் மகிமை பெற - 227

உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவே உந்தன் அரசு விரைவில் வரவேண்டும் கர்த்தாவே – ஜெபிக்கிறோம் நாங்கள் துதிக்கிறோம் 1. இந்தியா இரட்சகரை அறிய வேண்டுமே இருளில் ...

உம்மைப் போல் யாருண்டு - 361

உம்மைப் போல் யாருண்டு எந்தன் இயேசு நாதா இந்தப் பார்தலத்தில் உம்மைப் போல் யாருண்டு பாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன் தேவா தம் அன்பினால் மன்னித்தீர் --- உம்மைப் 1. ...

தொழுகிறோம் எங்கள் பிதாவே - 354

தொழுகிறோம் எங்கள் பிதாவே பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே அனுபல்லவி பரிசுத்த அலங்காரத்துடனே தரிசிப்பதினால் சரணம் சரணம் சரணங்கள் 1. வெண்மையும் சிவப்புமானவர் உண்மையே உருவாய்க் கொண்டவர் என்னையே மீட்டுக் கொண்டவர் அன்னையே இதோ சரணம் சரணம் --- தொழுகிறோம் 2. தலை தங்க மயமானவர் தலை மயிர் சுருள் சுருளானவர் பதினாயிரம் பேரில் சிறந்தவர் பதினாயிரமாம் சரணம் சரணம் --- தொழுகிறோம் 3. கண்கள் புறாக்கண்கள் போல கன்னங்கள் பாத்திகள் போல சின்னங்கள் சிறந்ததாலே எண்ணில்லாத சரணம் சரணம் --- தொழுகிறோம் 4. கரங்கள் பொன் வளையல்கள் போல நிறங்களும் தந்தத்தைப் போல கால்களும் கல் தூண்கள் போல காண்பதாலே சரணம் சரணம் --- தொழுகிறோம் 5. சமஸ்த சபையின் சிரசே நமஸ்காரம் எங்கள் அரசே பிரதானம் எம் மூலைக்கல்லே ஏராளமாய் சரணம் சரணம் --- தொழுகிறோம் 6. அடியார்களின் அஸ்திபாரம் அறிவுக்கெட்டாத விஸ்தாரம் கூடி வந்த எம் அலங்காரம் கோடா கோடியாம் சரணம் சரணம் --- தொழுகிறோம் 7. பார்த்திபனே கன தோத்திரம் கீர்த்தனம் மங்களம் நித்தியம் வாழ்க வாழ்க வாழ்க என்றும் அல்லேலூயா ஆமென் ஆமென் --- தொழுகிறோம்

பரம அழைப்பின் பந்தய - 894

பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய் நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன் ஓடுகிறேன் நான் ஓடுகிறேன் இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன் அல்லேலுயா அல்லேலுயா -4 1. இலாபமான அனைத்தையும...

துதி எடுத்தால் சாத்தான் - 878

துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான் முறுமுறுத்தால் திரும்பி வருவான்                          பல்லவி துதித்துப்பாடி மதிலை இடிப்போம் மகிழ்ந்து பாடி எரிகோ பிடிப்போம் ...

போற்றி துதிப்போம் எம் - 195

போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே புதிய இதயமுடனே நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை நான் என்றும் பாடித்துதிப்போம் – (2) இயேசு என்னும் நாமமே என் ஆத்துமாவின் கீதமே-எ...

குயவனே குயவனே படைப்பின் - 200

குயவனே குயவனே படைப்பின் காரணனே களிமண்ணான என்னையுமே கண்ணோக்கிப் பார்த்திடுமே 1. வெறுமையான பாத்திரம் நான் வெறுத்து தள்ளாமலே நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்க செ...

அல்லேலூயா துதி மகிமை - என்றும்

அல்லேலூயா துதி மகிமை - என்றும் இயேசுவுக்கு செலுத்திடுவோம் ஆ அல்லேலூயா அல்லேலூயா சிலுவையை சுமப்பாயா உலகத்தை வெறுப்பாயா உலகத்தை வெறுத்து இயேசுவின் பின்னே ஓடியே வருவாயா மோட்சத்தை அடைந்திடவே பாடுகள் படவேண்டும் பாடுகள் மத்தியில் பரமன் இயேசுவில் நிலைத்தே நிற்க வேண்டும் ஜெபத்திலே தரித்திருந்து அவர் சித்தம் நிறைவேற்று முடிவு பரியந்தம் அவரில் நிலை நிற்க பெலனைப் பெற்றுக்கொள்ளு சென்றவர் வந்திடுவார் அழைத்தே சென்றிடுவார் அவருடன் செல்ல ஆயத்தமாவோம் அவருடன் வாழ்ந்திடவே கண்ணீர் துடைத்திடுவார் கவலைகள் போக்கிடுவார் கரங்களை நீட்டியே கருணையோடு கர்த்தரே காத்திடுவார்

நானும் என் வீட்டாருமோவென்றால்

நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் நீயும் சேவிப்பாயா – நீயும் சேவிப்பாயா? 1. கர்த்தரையே சேவிப்பது ஆகாத தென்று கண்டால் யாரை நீ சேவிப்பாய் யென்பதை ...

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து - 667

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து பல்லவி சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து இவர் தாம், இவர் தாம், இவர் தாம் சரணங்கள் 1. நாம தாதி பிதாவின் திருப் பாலர் இவர், அனுகூலர் இவர், மனுவேலர் இவர் --- சமாதானம் 2. நேய கிருபையின் ஒரு சேயர் இவர், பரம ராயர் இவர், நாம தாயர் இவர் --- சமாதானம் 3. ஆதி நரர் செய்த தீதறவே, அருளானந்தமாய், அடியார் சொந்தமாய் --- சமாதானம் 4. ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே, அறிஞோர் தேடவே, ஆயரும் கூடவே --- சமாதானம் 5. மெய்யாகவே மே சியாவுமே, நம்மை நாடினாரே, கிருபை கூறினாரே --- சமாதானம் 6. அருளானந்த மோட்ச வழி காட்டினாரே, நிலை நாட்டினாரே, முடி சூட்டினாரே --- சமாதானம்

ஓ மனிதனே நீ எங்கே - 627

ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய் பல்லவி ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்? காலையில் மலர்ந்து மாலையில் மறையும் மலராய் வாழ்கின்றாய் சரணங்கள் 1. மண்ணில் பிறந்த மானிடனே மண்ணுக்கே நீ திரும்புவாய் மரணம் உன்னை நெருங்கும் போது எங்கே நீ ஓடுவாய் மரணத்தின் பின்னே நடப்பது என்ன என்பதை நீ அறிவாயோ --- ஓ 2. பாவியாய் பிறந்த மானிடனே பாவியாய் நீ மரிக்கின்றாய் இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டால் நீ இன்றே மரணத்தை வென்றிடுவாய் நித்திய ஜீவனை பெற்று நீ மோட்சத்தில் நிலைத்தென்றும் வாழ்ந்திடுவாய் --- ஓ

ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து

ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே என் ஏசு குருசை சுமந்தே என்நேசர் கொல்கதா மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார் 1. கன்னத்தில் அவர் ஓங்கி அறைய சின்னப் பிள்ளை போல் ஏங...

திருப்பாதம் நம்பி வந்தேன் - 167

திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பை கண்டைந்தேன் தேவ சமூகத்திலே இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரைத் தேற்றிடுமே சிலுவை நிழல் எந்தன் தஞ்சம் சுகமாய் அங்குத் தங்கிடுவேன் என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர் இன்னல் துன்ப நேரத்திலும் கருத்தாய் விசாரித்து என்றும் கனிவோடென்னை நோக்கிடுமே மனம் மாற மாந்தர் நீரல்ல மன வேண்டுதல் கேட்டிடும் எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே இயேசுவே உம்மை அண்டிடுவேன் என்னைக் கைவிடாதிரும் நாதா என்ன நிந்தை நேரிடினும் உமக்காக யாவும் சகிப்பேன் உமது பெலன் ஈந்திடுமே விசுவாசத்தால் பிழைத்தோங்க வீரபாதைக் காட்டினீரே மலர்ந்து கனிதரும் வாழ்வை விரும்பி வரம் வேண்டுகிறேன் உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே உண்மையாய் வெட்கம் அடையேன் தமது முகப் பிரகாசம் தினமும் என்னில் வீசிடுதே சத்துரு தலை கவிழ்ந்தோட நித்தமும் கிரியை செய்திடும் என்னைத் தேற்றிடும் அடையாளம் இயேசுவே இன்று காட்டிடுமே பலர் தள்ளின மூலைக்கல்லே பரம சீயோன் மீதிலே பிரகாசிக்கும் அதை நோக்கி பதறாமலே காத்திருப்பேன்

வெற்றிக் கொடி பிடித்திடுவோம் - 308

வெற்றிக் கொடி பிடித்திடுவோம் – நாம் வீரநடை நடந்திடுவோம் 1. வெள்ளம்போல சாத்தான் வந்தாலும் ஆவிதாமே கொடி பிடிப்பார் அஞ்சாதே என் மகனே நீ அஞ்சாதே என் மகளே 2. ஆயிரம் தான் த...

பலிபீடத்தில் என்னைப் பரனே

பலிபீடத்தில் என்னைப் பரனே படைக்கிறேனே இந்த வேளை அடியேனை திருச்சித்தம் போல ஆண்டு நடத்திடுமே (2) பல்லவி கல்வாரியின் அன்பினையே கண்டு விரைந்தோடி வந்தேன் (2) கழுவும் உம் ...

ஆவியானவரே அன்பின் - 256

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே இப்போ வாரும் இறங்கி வாரும் எங்கள் மத்தியிலே 1. உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே 2. பத்மு த...

இடைவிடா நன்றி உமக்குத்தானே

இடைவிடா நன்றி உமக்குத்தானே இணையில்லா தேவன் உமக்குத்தானே – (2) 1. என்ன நடந்தாலும் நன்றி ஐயா யார் கைவிட்டாலும் நன்றி ஐயா – (2) நன்றி நன்றி --- இடைவிடா 2. தேடி வந்தீரே நன்றி ஐயா தெ...

எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம்

எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் - தேவா என்றென்றும் நான் பாடுவேன் இந்நாள் வரை என் வாழ்விலே நீர் செய்த நன்மைக்கே 1. பூமியில் வாழ்கின்ற யாவும் அதின் மேல் உள்ள ஆகாயமும் வான்தூதர் சேனைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே 2. சூரிய சந்திரரோடே சகல நட்சத்திர கூட்டமும் ஆகாயப் பறவைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே 3. காட்டினில் வாழ்கின்ற யாவும் கடும் காற்றும் பனித் தூறலும் நாட்டினில் வாழ்கின்ற யாவும் நாதா உம்மைப் போற்றுதே 4. பாவ மனுக்குலம் யாவும் தேவா உம் அன்பினை உணர்ந்தே சிலுவையின் தியாகத்தைக் கண்டு ஒயா துதி பாடுதே

துதித்துப் பாடிட பாத்திரமே

1. துதித்துப் பாடிட பாத்திரமே துங்கவன் இயேசுவின் நாமமதே துதிகளின் மத்தியில் வாசஞ்செய்யும் தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே பல்லவி ஆ! அற்புதமே அவர் நடத்துதலே ஆனந்தமே பரமானந்தமே நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதே நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம் 2. கடந்த நாட்களில் கண்மணிபோல் கருத்துடன் நம்மைக் காத்தாரே கர்த்தரையே நம்பி ஜீவித்திட கிருபையும் ஈந்ததாலே ஸ்தோத்தரிப்போமே --- ஆ! அற்புதமே 3. அக்கினி ஊடாய் நடந்தாலும் ஆழியில் தண்ணீரைக் கடந்தாலும் சோதனையோ மிகப் பெருகினாலும் ஜெயம் நமக்கீந்ததால் ஸ்தோத்தரிப்போமே --- ஆ!அற்புதமே 4. இந்த வனாந்திர யாத்திரையில் இன்பராம் இயேசு நம்மோடிருப்பார் போகையிலும் நம் வருகையிலும் புகலிடம் ஆனதால் ஸ்தோத்தரிப்போமே --- ஆ!அற்புதமே 5. வாஞ்சைகள் தீர்த்திட வந்திடுவார் வாரும் என்றே நாம் அழைத்திடுவோம் வானத்திலே ஒன்று சேர்ந்திடும் நாள் விரைந்து நெருங்கிட ஸ்தோத்தரிப்போமே --- ஆ!அற்புதமே

உதவி வரும் கன்மலை நோக்கிப் 

உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன் வானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன் (2) 1. கால்கள் தள்ளாட விடமாட்டார் காக்கும் தேவன் உறங்க மாட்டார் (2) இஸ்ரவேலை காக்கிறவர் என்னாளும் தூங்க மாட்டார் (2) – உதவி 2. கர்த்தர் என்னை காக்கின்றார் எனது நிழலாய் இருகின்றார் (2) பகலினிலும் இரவினிலும் பாது காக்கின்றார் (2) – உதவி 3. கர்த்தர் எல்லா தீங்கிற்கும் விலக்கி என்னைக் காத்திடுவார் (2) அவர் எனது ஆத்துமாவை அனுதினம் காத்திடுவார் (2) – உதவி 4. போகும் போதும் காக்கின்றார் திரும்பும் போதும் காக்கின்றார் (2) இப்போது எப்போது என்னாளும் காக்கின்றார் (2) – உதவி

அடைக்கலமே உமதடிமை நானே

அடைக்கலமே உமதடிமை நானே ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே நித்தம் நித்தம் நான் நினைப்பேனே அளவற்ற அன்பினால் அணைப்பவரே எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா பாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே பக்தரின் பேரின்ப பாக்கியமிதே என்னை என்றும் போதித்து நடத்துபவரே கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே -நடக்கும் வழிதனை காட்டுபவரே நம்பி வந்தோனை கிருபை சூழ்ந்து கொள்ளுதே கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ குழியில் விழாதபடி காத்துக் கொண்டீரே அழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே பாவங்களை பாராதென்னை பற்றி கொண்டீரே சாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்ப தந்தீரே – உற்சாக ஆவி என்னை தாங்கச் செய்தீரே