எந்த நிலையில் நானிருந்தாலும்
என்னை வெறுக்காதவர்
என் இயேசு ஒருவரே
என் தேவன் ஒருவரே
நோயாளியாய் நானிருந்தால்
பலர் வெறுப்பார்கள்
என் நோய்களையே சொல்லி
சொல்லி நோகடிப்பார்கள்
கடனாளியாய் நானிருந்தால்
பலர் வெறுப்பார்கள்
என் கடன்களையே சொல்லி
சொல்லி கலங்க வைப்பார்கள்
பட்டம் படிப்பு இல்லாவிட்டால்
பலர் வெறுப்பார்கள்
வெறும் பட்ட மரம் என்று
சொல்லி பரிகசிப்பார்கள்
அனாதையாய் நானிருந்தால்
பலர் வெறுப்பார்கள்
அன்பு வேண்டுமா என்று சொல்லி
அலைய வைப்பார்கள்
Comments
Post a Comment