Skip to main content

திருப்பாதம் நம்பி வந்தேன் - 167

திருப்பாதம் நம்பி வந்தேன்
கிருபை நிறை இயேசுவே
தமதன்பை கண்டைந்தேன்
தேவ சமூகத்திலே

இளைப்பாறுதல் தரும் தேவா
களைத்தோரைத் தேற்றிடுமே
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
சுகமாய் அங்குத் தங்கிடுவேன்

என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர்
இன்னல் துன்ப நேரத்திலும்
கருத்தாய் விசாரித்து என்றும்
கனிவோடென்னை நோக்கிடுமே

மனம் மாற மாந்தர் நீரல்ல
மன வேண்டுதல் கேட்டிடும்
எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
இயேசுவே உம்மை அண்டிடுவேன்

என்னைக் கைவிடாதிரும் நாதா
என்ன நிந்தை நேரிடினும்
உமக்காக யாவும் சகிப்பேன்
உமது பெலன் ஈந்திடுமே

விசுவாசத்தால் பிழைத்தோங்க
வீரபாதைக் காட்டினீரே
மலர்ந்து கனிதரும் வாழ்வை
விரும்பி வரம் வேண்டுகிறேன்

உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே
உண்மையாய் வெட்கம் அடையேன்
தமது முகப் பிரகாசம்
தினமும் என்னில் வீசிடுதே

சத்துரு தலை கவிழ்ந்தோட
நித்தமும் கிரியை செய்திடும்
என்னைத் தேற்றிடும் அடையாளம்
இயேசுவே இன்று காட்டிடுமே

பலர் தள்ளின மூலைக்கல்லே
பரம சீயோன் மீதிலே
பிரகாசிக்கும் அதை நோக்கி
பதறாமலே காத்திருப்பேன்

Comments

Popular posts from this blog

விசுவாசியே நீ பதறாதே - 234

கர்த்தரின் கை குறுகவில்லை 1. கர்த்தரின் கை குறுகவில்லை கர்த்தரின் வாக்கு மாறிடாதே சுத்தர்களாய் மாறிடவே சுதன் அருள் புரிந்தனரே பல்லவி விசுவாசியே நீ பதறாதே விசுவாசியே நீ கலங்காதே விசுவாசத்தால் நீதிமான் இன்றும் என்றும் பிழைப்பான் 2. திருச்சபையே நீ கிரியை செய்வாய் திவ்விய அன்பில் பெருகிடுவாய் தலைமுறையாய் தலைமுறையாய் தழைத்திட அருள் புரிவாய் --- விசுவாசியே 3. நெஞ்சமே நீ அஞ்சிடாதே தஞ்சம் இயேசு உன் அரணே தம் ஜனத்தை சீக்கிரமாய் தம்முடன் சேர்த்துக் கொள்வார் --- விசுவாசியே 4. மேகம் போன்ற வாக்குத்தத்தம் சூழ நின்றே காத்திருக்க விசுவாசத்தால் உரிமை கொள்வாய் விரைந்து முன் ஏகிடுவாய் --- விசுவாசியே

அனைத்து சமயத்து மெய்ப்பொருள்

அனைத்து சமயத்து மெய்ப்பொருள் இயேசுவே வேதங்கள் கூறிடும் கருப்பொருள் இயேசுவே மெய்ப்பொருள் இயேசுவே... உண்மை என்பது ஒன்றே ஒன்றாகும் அண்மையில் சேர்ந்திட்டால் அதுவும...

எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம்

எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் - தேவா என்றென்றும் நான் பாடுவேன் இந்நாள் வரை என் வாழ்விலே நீர் செய்த நன்மைக்கே 1. பூமியில் வாழ்கின்ற யாவும் அதின் மேல் உள்ள ஆகாயமும் வான்தூதர் சேனைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே 2. சூரிய சந்திரரோடே சகல நட்சத்திர கூட்டமும் ஆகாயப் பறவைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே 3. காட்டினில் வாழ்கின்ற யாவும் கடும் காற்றும் பனித் தூறலும் நாட்டினில் வாழ்கின்ற யாவும் நாதா உம்மைப் போற்றுதே 4. பாவ மனுக்குலம் யாவும் தேவா உம் அன்பினை உணர்ந்தே சிலுவையின் தியாகத்தைக் கண்டு ஒயா துதி பாடுதே