Skip to main content

Posts

உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே

உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே உம்மையன்றி யாரைப்பாடுவேன் – ஏசையா உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே சரணங்கள் 1. பரிசுத்தமே பரவசமே பரனேசருளே வரம் பொருளே தேடினதால் கண்டடைந்தேன் பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் — உம்பாதம் 2. புது எண்ணெய்யால் புது பெலத்தால் புதிய கிருபை புது கவியால் நிரப்பி நிதம் நடத்துகின்றீர் நூதன சாலேமில் சேர்த்திடுவீர் — உம்பாதம் 3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் நெருங்கி உதவி எனக்களித்தீர் திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல் தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் — உம்பாதம் 4. என் முன் செல்லும் உம் சமூகம் எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல் உமது கோலும் உம் தடியும் உண்மையாய் என்னையும் தேற்றிடுதே — உம்பாதம் 5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும் கொடியாய் அடியேன் படர்ந்திலங்க கிளை நறுக்கிக் களை பிடுங்கி கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் — உம்பாதம் 6. என் இதய தெய்வமே நீர் எனது இறைவா ஆருயிரே நேசிக்கிறேன் இயேசுவே உம் நேசமுகம் என்று கண்டிடுவேன் — உம்பாதம் 7. சீருடனே பேருடனே சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில் சீக்கிரமாய் சேர்த்திடுவீர் சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் — உம்பாதம்

ஏறுகின்றார் தள்ளாடித் தவழ்ந்து களைப்போடே

ஏறுகின்றார் தள்ளாடித் தவழ்ந்து களைப்போடே என் இயேசு குருசை சுமந்தே என் நேசர் கொல்கொதா மலையின்மேல் நடந்தே ஏறுகின்றார் 1.கன்னத்தில் அவன் ஓங்கி அடிக்கச் சின்னப் பிள்ளைபோல் ஏங்கி நின்றார் அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி ஆண்டவரை அனுப்புகின்றான் - ஏறு 2.மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே நெஞ்சைப் பிளந்தான் ஆ! கொடுமை இரத்தமும் நீரும் ஓடி வருதே இரட்சகரை நோக்கியே பார் - ஏறு 3.இந்தப்பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்ச் சொந்தப்படுத்தி ஏற்றுக்கொண்டார் நேசிக்கின்றாயோ இயேசு நாதரை நேசித்து வா குருசெடுத்தே - ஏறு 4.சேவல் கூவிடும் மூன்று வேளையும் சொந்த குருவை மறுதலித்தான் ஓடி ஒளியும் பேதுருவையும் தேடி அன்பாய் நோக்குகின்றார் - ஏறு 5.பின்னே நடந்த அன்பின் சீஷன்போல் பின்பற்றி வா சிலுவை வரை காடியைப் போல் கசந்திருக்கும் கஷ்டங்களை அவரிடம் சொல் - ஏறு 6.செட்டைகளின் கீழ் சேர்த்தனைத்திடும் சொந்தத் தாயின் அன்பிதுவே எருசலமே! எருசலமே! என்றழுதார் கண் கலங்க - ஏறு

குயவனே குயவனே படைப்பின் காரணனே - 200

குயவனே குயவனே படைப்பின் காரணனே களிமண்ணான என்னையுமே கண்ணோக்கிப் பார்த்திடுமே 1.வெறுமையான பாத்திரம் நான் வெறுத்துத் தள்ளாமலே நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்யுமே வேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம் இயேசுவை போற்றிடுதே என்னையும் அவ்விதப் பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே 2.விலைபோகாத பாத்திரம் நான் விரும்புவாரில்லையே விலையில்லா உம் கிருபையால் உகந்ததாக்கிடுமே தடைகள் யாவும் நீக்கி என்னைத் தம்மைப் போல் மாற்றிடுமே உடைத்து என்னை உந்தனுக்கே உடைமையாக்கிடுமே 3.மண்ணாசையில் நான் மயங்கியே மெய்வழி விட்டகன்றேன் கண்போன போக்கைப் பின்பற்றினேன் கண்டேனில்லை இன்பமே காணாமல்போன பாத்ரம் என்னைத் தேடிவந்த தெய்வமே வாழ்நாளெல்லாம் உம்பாதம் சேரும் பாதையில் நடத்திடுமே

தேவப் பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ

தேவப் பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே ஆவலதாய் எனைப் பைம்புல்மேல் அவர் மேய்த் தமர் நீர் அருளுகின்றார் 1. ஆத்துமத் தன்னைக் குளிரப்பண்ணி அடியேன் கால்களை நீதி என்னும் நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம் நிதமும் சுகமாய் நடத்துகின்றார் 2. சாநிழல் பள்ளத் திறங்கிடினும் சற்றும் தீங்கு கண்டஞ்சேனே வானபரன் என்னோடிருப்பார் வளை தடியும் கோலுமே தேற்றும் 3. பகைவர்க் கெதிரே ஒரு பந்தி பாங்காய் எனக்கென் றேற்படுத்திச் சுக தயிலம் கொண்டென் தலையைச் சுபமாய் அபிஷேகம் செய்குவார் 4. ஆயுள் முழுவதும் என் பாத்ரம் அருளும் நலமுமாய் நிரம்பும் நேயன் வீட்டினில் சிறப்போடே நெடுநாள் குடியாய் நிலைத்திருப்பேன

குதூகலம் கொண்டாட்டமே - 964

குதூகலம் கொண்டாட்டமே என் இயேசுவின் சந்நிதானத்தில் ஆனந்தம் ஆனந்தமே என் அப்பாவின் திருப்பாதத்தில் 1. பாவமெல்லாம் பறந்தது நோய்களெல்லாம் தீர்ந்தது இயேசுவின் இரத்தத்தினால் கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்பு பரிசுத்த ஆவியினால் 2. தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும் தேவாலயம் நாமே ஆவியான தேவன் அச்சாரமானார் அதிசயம் அதிசயமே 3. வல்லவர் என் இயேசு வாழ வைக்கும் தெய்வம் வெற்றிமேலே வெற்றி தந்தார் ஒருமனமாய் கூடி ஓசன்னா பாடி ஊரெல்லாம் கொடியேற்றுவோம் 4. எக்காள சத்தம், தூதர்கள் கூட்டம் நேசர் வருகின்றார் ஒருநொடி பொழுதில் மறுரூபமாவோம் மகிமையில் பிரவேசிப்போம்

கால் மிதிக்கும் தேசமெல்லாம்-என் - 963

கால் மிதிக்கும் தேசமெல்லாம்-என் கர்த்தருக்கு சொந்தமாகும் கண்பார்க்கும் பூமியெல்லாம் கல்வாரி கொடிபறக்கும் 1. பறக்கட்டும் பறக்கட்டும் சிலுவையின் ஜெயக்கொடி-அல்லேலூயா உயரட்டும் உயரட்டும் இயேசுவின் திருநாமம்-அல்லேலூயா 2. எழும்பட்டும் எழும்பட்டும் கிதியோனின் சேனைகள் முழங்கட்டும் முழங்கட்டும் இயேசுதான் வழியென்று 3. செல்லட்டும் செல்லட்டும் ஜெபசேனை துதிசேனை வெல்லட்டும் வெல்லட்டும் எதிரியின் எரிகோவை 4. திறக்கட்டும் திறக்கட்டும் சவிசேஷ வாசல்கள் வளரட்டும் வளரட்டும் அபிஷேக திருச்சபைகள்

கலங்காதே கலங்காதே - 958

கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார் முள்முடி உனக்காக இரத்தமெல்லாம் உனக்காக பாவங்களை அறிக்கையிடு பரிசுத்தமாகி விடு நீ கல்வாரி மலைமேலே காயப்பட்ட இயேசுவைப் பார் கரம் விரித்து அழைக்கின்றார் கண்ணீரோடு ஓடி வா நீ காலமெல்லாம் உடன் இருந்து கரம்பிடித்து நடத்திச் செல்வார் கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணி போல் காத்திடுவார் உன்னை உலகத்தின் வெளிச்சம் நீ எழுந்து ஒளி வீசு மலைமேல் உள்ள பட்டணம் – தம்பி (நீ) மறைவாக இருக்காதே உலகம் உன்னை வெறுத்திடலாம் உற்றார் உன்னைத் துரத்திடலாம் உன்னை அழைத்தவரோ உள்ளங்கையில் ஏந்திடுவார் உன் நோய்கள் சுமந்து கொண்டார் உன் பிணிகள் ஏற்றுக் கொண்டார் நீ சுமக்கத் தேவையில்லை விசுவாசி அது போதும்

உந்தன் நாமம் மகிமை பெற

உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவே உந்தன் அரசு விரைவில் வரவேண்டும் கர்த்தாவே – ஜெபிக்கிறோம் நாங்கள் துதிக்கிறோம் 1. இந்தியா இரட்சகரை அறிய வேண்டுமே இருளில் உள்ளோர் வெளிச்சத்தையே காண வேண்டுமே 2. சாத்தான் கோட்டை தகர்ந்து விழ வேண்டுமே சாபம் நீங்கி சமாதானம் வரணுமே 3. கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் அழுகிறோம் கரம்விரித்து உம்மை நோக்கி பார்க்கிறோம் 4. சிலுவை இரத்தம் தெளிக்கப்பட வேண்டுமே ஜீவநதி பெருகியோட வேண்டுமே 5. ஜெபசேனை எங்கும் எழும்ப வேண்டுமே உபவாச கூட்டம் பெருக வேண்டுமே

உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை

உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை அப்பானு கூப்பிடவா உம்மை அம்மானு கூப்பிடவும் ஆசை அம்மானும் கூப்பிடவா (2) உம்மை அப்பானு கூப்பிடவா உம்மை அம்மானும் கூப்பிடவா 1. கருவில் என்னை காத்தத பார்த்தா அம்மானு சொல்லனும் உம் தோளில் என்னை சுமப்பதை பார்த்தா அப்பானு சொல்லனும் என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா அம்மானு சொல்லனும் என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா அப்பானு சொல்லனும் – உம்மை அப்பானு கூப்பிடவா… 2. என் கண்ணீரை துடைப்பதை பார்த்தா அம்மானு சொல்லனும் என் விண்ணப்பத்தை கேட்பதை பார்த்தா அப்பானு சொல்லனும் என்னை ஏந்துவதும் தாங்குவதும் பார்த்தா அம்மானு சொல்லனும் உம் இரக்கத்தை உருக்கத்தை பார்த்தா அப்பானு சொல்லனும் – உம்மை அப்பானு கூப்பிடவா…

திருக்கரத்தால் தாங்கி என்னை

திருக்கரத்தால் தாங்கி என்னை திருச்சித்தம் போல் நடத்திடுமே குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் வனைந்திடுமே . 1. உம் வசனம் தியானிக்கையில் இதயமதில் ஆறுதலே காரிருளில் நடக்கையிலே தீபமாக வழி நடத்தும் 2. ஆழ்கடலில் அலைகளினால் அசையும்போது என் படகில் ஆத்ம நண்பர் இயேசு உண்டே சேர்ந்திடுவேன் அவர் சமூகம் 3. அவர் நமக்காய் ஜீவன் தந்து அளித்தனரே பெரிய மீட்பு கண்களினால் காண்கிறேனே இன்பக் கானான் தேசமதை

உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு

உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு (2) என் யேசையா அல்லேலுயா என் யேசையா அல்லேலுயா -2 இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே (2) எவ்வேளையும் ஐயா நீர்தானே – 2 என் சிநேகமும் நீரே என் ஆசையும் நீரே (2) என் எல்லாமே ஐயா நீர்தானே – 2 இம்மையிலும் நீரே மறுமையிலும் நீரே (2) எந்நாளுமே ஐயா நீர்தானே-2

உம்மோடு இருக்கணுமே ஐயா

உம்மோடு இருக்கணுமே ஐயா உம்மைப் போல் மாறணுமே உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து வெளிச்சம் கொடுக்கணுமே 1. ஓடும் நதியின் ஓரம் வளரும் மரமாய் மாறணுமே எல்லா நாளும் இலைகளோடு கனிகள் கொடுக்கணுமே 2. உலகப் பெருமை இன்பமெல்லாம் குப்பையாய் மாறணுமே உம்மையே என் கண்முன் வைத்து ஓடி ஜெயிக்கணுமே 3. ஆத்ம பார உருக்கத்தோடு அழுது புலம்பணுமே இரவும் பகலும் விழித்து ஜெபிக்கும் மேய்ப்பன் ஆகணுமே – நான் 4. பேய்கள் ஓட்டும் வல்லமையோடு பிரசங்கள் பண்ணணுமே கடினமான பாறை இதயம் உடைத்து நொறுக்கணுமே – நான் 5. வார்த்தை என்னும் வாளையேந்தி யுத்தம் செய்யணுமே விசுவாசம் என்னும் கேடயத்தால் பிசாசை வெல்லணுமே – நான்

பரிசுத்தர் கூட்டம் நடுவில்

பரிசுத்தர் கூட்டம் நடுவில் ஜொலித்திடும் சுத்த ஜோதியே அரூபியே இவ்வேளையில் அடியார் நெஞ்சம் வாரீரோ 1. மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ? கல் தின்னக் கொடுக்கும் பெற்றோர் உண்டோ? பொல்லாதோர் கூட செய்திடார் நற்பிதா நலம் அருள்வார் 2. சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே விரும்பா அசுத்தம் யாவும் போக்குமே பாவி நீசப்பாவி நானையா தேவா இரக்கம் செய்ய மாட்டீரோ? 3.பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை யாரும் காணா உள்ளலங்கோலத்தை மனம் நொந்து மருளுகின்றேன் பரிசுத்தம் கெஞ்சுகின்றேன் 4.துணை வேண்டும் தகப்பனே உலகிலே என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே என் ஜீவன் எல்லையெங்கிலும் பரிசுத்தம் என எழுதும்

என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்

என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் என் உயிரான உயிரான உயிரான இயேசு 1. உலகமெல்லாம் மறக்குதையா உணர்வு எல்லாம் இனிக்குதையா உம் நாமம் துதிக்கையிலே இயேசையா உம் அன்பை ருசிக்கையிலே 2. உம் வசனம் எனக்கு உணவாகும் உடலுக்கெல்லாம் மருந்தாகும் இரவும் பகலுமையா உந்தன் வசனம் தியானிக்கிறேன் 3. உம் திரு நாமம் உலகத்திலே உயர்ந்த அடைக்கல அரண்தானே நீதிமான் உமக்குள்ளே ஓடி சுகமாய் இருப்பானே

கிருபையால், நிலை நிற்கின்றோம்

கிருபையால், நிலை நிற்கின்றோம் உம் கிருபையால், நிலை நிற்கின்றோம் கிருபை - (7) --- கிருபையால் 1. பெயர் சொல்லி அழைத்தது, உங்க கிருபை பெரியவனாக்கியதும், உங்க கிருபை கிருபை - (7) --- கிருபையால் 2. நீதிமானாய் மாற்றியது, உங்க கிருபை நித்தியத்தில் சேர்ப்பது, உங்க கிருபை கிருபை - (7) --- கிருபையால் 3. கட்டுகளை நீக்கினது, உங்க கிருபை காயங்களை கட்டியதும், உங்க கிருபை கிருபை - (7) --- கிருபையால் 4. வல்லமையை அளித்தது, உங்க கிருபை வரங்களை கொடுத்தது, உங்க கிருபை கிருபை - (7) --- கிருபையால் 5. கிருபையை, கொண்டாடுகிறோம் தேவ கிருபையை, கொண்டாடுகிறோம் கிருபை - (7) --- கிருபையால்

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே உம் வார்த்தையிலே சுகம் உம் வார்த்தையிலே மதுரம் உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம் 1.மாராவின் தண்ணீரெல்லாம் மதுரமாக மாறிப்போகும் கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - நீர் 2.இருளான வாழ்க்கை எல்லாம் ஒளியாக மாறிப்போகும் கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - நீர் 3.எரிகோவின் தடைகள் எல்லாம் துதிகளாலே மாறிப்போகும் கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - நீர் 4.வியாதிகள் வறுமையெல்லாம் விசுவாசத்தால் மாறிப்போகும் கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே - நீர்

நன்றி பலி பீடம் கட்டுவோம்

நன்றி பலி பீடம் கட்டுவோம் நல்ல தெய்வம் நன்மை செய்தார் செய்த நன்மை ஆயிரங்கள் சொல்லிச் சொல்லி பாடுவேன் நன்றி தகப்பனே நன்மை செய்தீரே ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர் பாவம் நீங்கிட கழுவி விட்டீர் உமக்கென்று வாழ பிரித்தெடுத்து உமது ஊழியம் செய்ய வைத்தீர் இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர் இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டீர் உமக்கு சொந்தமாய் வாங்கிக் கொண்டு உரிமைச் சொத்தாக வைத்துக் கொண்டீர் பார்க்கும் கண்களை தந்தீரய்யா பாடும் உதடுகள் தந்தீரய்யா உழைக்கும் கரங்களை தந்தீரய்யா ஓடும் கால்களைத் தந்தீரய்யா நல்ல குடும்பம் நீர் தந்தீரய்யா செல்ல பிள்ளைகள் தந்தீரய்யா அணைக்கும் கணவனை தந்தீரய்யா அன்பு மனைவியை தந்தீரய்யா இருக்க நல்ல ஒரு வீடு தந்தீர் வாழத் தேவையான வசதி தந்தீர் கடுமையாக தினம் உழைக்க வைத்தீர் கடனே இல்லாமல் வாழ வைத்தீர் புதிய உடன்பாட்டின் அடையாளமாய் புனித இரத்தம் ஊற்றினீரே சத்திய ஜீவ வார்த்தையாலே மரித்த வாழ்வையே மாற்றினீரே எதிராய் வாழ்ந்து வந்த இவ்வுலகை ஒப்புரவாக்கினீர் உம் இரத்தத்தால் தூரம் வாழ்ந்து வந்த எங்களையே அருகில் கொண்டுவந்தீர் ஆவியினால் குற்றம் செய்ததால் மரித்திருந்தோம் இயேசுவோடே...

உன்னை அதிசயம் காணச் செய்வேன்

உன்னை அதிசயம் காணச் செய்வேன் நீ அற்புதம் கண்டிடுவாய் இன்று வாக்களித்தார் தேவன் இன்று நிறைவேற்ற வந்து விட்டார் --- உன்னை 1. வழிதிறக்கும் அதிசயம் நடந்திடுமே செங்கடலும் திறந்தே வழிவிடுமே தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே இடைஞ்சலெல்லாம் இன்றே மறைந்திடுமே --- உன்னை 2. குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே இறைமகனாம் இயேசுவால் நடந்திடுமே வாதையெல்லாம் மறைந்தே போகுமே பாதையெல்லாம் நெய்யாய் பொழிந்திடுமே --- உன்னை 3. வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே காரிருளில் பேரொளி வீசிடுமே வனாந்திரமே வழியாய் வந்தாலும் வல்லவரின் கரமே நடத்திடுமே --- உன்னை

இஸ்ரவேல் என் ஜனமே - 233

இஸ்ரவேல் என் ஜனமே என்றும் இடறிட வேண்டாம் யேகோவா உன் தெய்வமானால் ஏதும் பயம் வேண்டாம் 1. ஓங்கும் புயமும் பலத்த கரமும் உன் பக்கமே யுண்டு தாங்கும் கிருபை தயவு இரக்கம் தாராளமாயுண்டு – இஸ்ரவேல் 2. பார்வோன் கைக்கு விடுத்து மீட்ட பஸ்கா ஆட்டுக்குட்டி ஆரோன் மோசே என்னும் நல்ல ஆசாரியர் உண்டு – இஸ்ரவேல் 3. செங்கடலில் வழி திறந்த சீயோன் நாயகனே பங்கமின்றி பாலைவனத்தில் பராமரித்தாரே – இஸ்ரவேல் 4. சத்துருக்களை சிதற அடித்த சர்வ வல்ல தேவன் யுத்தத்தில் உன் முன்னே சென்று ஜெயமெடுத்தாரே – இஸ்ரவேல் 5. பயப்படாதே சிறு மந்தையே பார் நான் உன் மேய்ப்பன் தயங்காதே மனம் கலங்காதே உன் தேவன் தினம் காப்பேன் – இஸ்ரவேல்

நீரின்றி வாழ்வேது இறைவா- 974

நீரின்றி வாழ்வேது இறைவா உம் நினைவின்றி மகிழ்வேது தேவா உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும் உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும் பல கோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும் இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும் ஒராயிரம் ஜீவன் உயிர் வாழுமே உம் வார்த்தையில் உண்டு அற்புதமே கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர் அதற்குள்ளும் ஜீவனை தந்தவர் நீர் உமையன்றி அனு வேதும் அசையாதையா உம் துணையின்றி உயிர் வாழ முடியாதைய்யா எத்தனை நன்மைகள் செய்தீரையா அதில் எதற்கென்று நன்றி சொல்லி துதிப்பேன் ஐயா அத்தனையும் சொல்ல வேண்டும் என்றால் ஆயிரம் ஆண்டுகள் போதாதையா

இயேசு கூட வருவார் - 986

இயேசு கூட வருவார் எல்லாவித அற்புதம் செய்வார் தந்தான தந்தனத்தானானா – 2 1. நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார் நொந்துபோன உள்ளத்தை தேற்றிடுவார் 2. வேதனை துன்பம் நீக்கிடுவார் சமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார் 3. கடன்தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார் கண்ணீர்கள் அனைத்தையும் துடைத்திடுவார் 4. எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவேன் எதிரியான சாத்தானை முறியடிப்பேன்

அனாதி தேவன் உன் - 472

அனாதி தேவன் உன் அடைக்கலமே அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே இந்த தேவன் என்றென்றுமுள்ள சதா காலமும் நமது தேவன் மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் 1. காருண்யத்தாலே இழுத்துக் கொண்டார் தூய தேவ அன்பே இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை இனிதாய் வருந்தி அழைத்தார் --- இந்த 2. கானகப் பாதை காரிருளில் தூய தேவ ஒளியே அழுகை நிறைந்த பள்ளத் தாக்குகளை அரும் நீரூற்றாய் மாற்றினாரே --- இந்த 3. கிருபை கூர்ந்து மன துருகும் தூய தேவ அன்பே உன் சமாதானத்தின் உடன்படிக்கைகளை உண்மையாய் கர்த்தர் காத்துக்கொள்வார் --- இந்த 4. இப்புவி யாத்திரை கடந்திடுவாய் தூய தேவ தயவால் கடும் கானகத்தில் கர்த்தர் மார்பினிலே கிடைக்கும் இளைப்பாறுதலே --- இந்த 5. வறண்ட வாழ்க்கை செழித்திடுமே தூய தேவ அருளால் நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும் சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம் --- இந்த 6. ஆனந்தம் பாடித் திரும்பியே வா தூய தேவ பெலத்தால் சீயோன் பர்வதம் உன்னைச் சேர்த்திடுவார் சந்ததம் மகிழ்ச்சி அடைவாய் --- இந்த

திக்கற்ற பிள்ளைகளுக்கு - 780

திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ தனிமையான எனக்கு சகாயர் நீரே அல்லவோ ஆதரவற்ற எனக்கு பக்க பலம் நீரே அல்லவோ என்றைக்கும் மறைந்திருப்பீரோ தூரத்தில் நின்று விடுவீரோ பேதைகளை மறப்பீரோ இயேசுவே மனமிரங்கும் கர்த்தாவே எழுந்தருளும் கை தூக்கி என்னை நிறுத்தும் தீமைகள் என்னை சூழும் நேரம் தூயவரே இரட்சியும் தாய் என்னை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை ஏழையின் ஜெபம் கேளும் இயேசுவே மனமிரங்கும்

ஆராதிக்க கூடினோம் - 84

ஆராதிக்க கூடினோம் ஆர்ப்பரித்து பாடிடுவோம் வல்ல இயேசு நல் தேவன் என்றென்றும் அவர் நம் தேவன் 1.தேவ வாசஸ்தலம் என்றும் இன்பமானதே மகிமை தேவன் கிறிஸ்து இயேசு பிரசன்னம் இங்கே மகிமை மகிமையே! என் மனம் பாடுதே மக்கள் மத்தியில் என் மகிழ்ச்சி பொங்குதே! 2.சீயோன் பெலனே! வெற்றி சிகரமே! சேனைகளின் கர்த்தர் இயேசு கிரியை செய்கிறார் ஜீவன் பெலனும் ஆசீர்வாதமே நித்திய ஜீவன் இன்றும் என்னில் ஓங்கி நிற்குதே! 3. கர்த்தர் சமூகம் என் வாழ்வின் மேன்மையே கர்த்தர் இயேசு ராஜன் என்றும் உயர்ந்து நிற்கிறார் அல்லேலூயா என் ஆவி பாடுதே ஆராதனை அழகு என்னை கவர்ந்து கொண்டதே! 4.தேவ சாயல் சபையில் தோன்றுதே தேவர் நடுவில் இயேசு நியாயம் செய்கிறார் தேவ சேவையே என் கெம்பீர சேவை தேவாவியில் நிறைந்து ஆடிப்பாடுவேன்

விடுதலை நாயகன் வெற்றியைத் - 101

விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார் எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம் 1. நான் பாடிப்பாடி மகிழ்வேன் – தினம் ஆடி ஆடித்துதிப்பேன் – எங்கும் ஓடி ஓடி சொல்லுவேன் என் இயேசு ஜீவிக்கிறார் 2. அவர் தேடி ஓடி வந்தார் என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார் என் பாவம் அனைத்தும் மன்னித்தார் புது மனிதனாக மாற்றினார் 3. அவர் அன்பின் அபிஷேகத்தால் என்னை நிரப்பி நடத்துகின்றார் சாத்தானின் வல்லமை வெல்ல அதிகாரம் எனக்குத் தந்தார் 4. செங்கடலைக் கடந்து செல்வேன் யோர்தானை மிதித்து நடப்பேன் எரிகோவை சுற்றி வருவேன் எக்காளம் ஊதி ஜெயிப்பேன்

சிலுவையில் நிழலில் - 381

சிலுவையில் நிழலில் அனுதினம் அடியான் சாய்ந்திளைப் பாரிடுவேன் - ஆ ஆ சிலுவையின் அன்பின் மறைவில் கிருபையின் இனிய நிழலில் ஆத்தும நேசரின் அருகில் அடைகிறேன் ஆறுதல் மனத...

உந்தன் நாமம் மகிமை பெற - 227

உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவே உந்தன் அரசு விரைவில் வரவேண்டும் கர்த்தாவே – ஜெபிக்கிறோம் நாங்கள் துதிக்கிறோம் 1. இந்தியா இரட்சகரை அறிய வேண்டுமே இருளில் ...

உம்மைப் போல் யாருண்டு - 361

உம்மைப் போல் யாருண்டு எந்தன் இயேசு நாதா இந்தப் பார்தலத்தில் உம்மைப் போல் யாருண்டு பாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன் தேவா தம் அன்பினால் மன்னித்தீர் --- உம்மைப் 1. ...

தொழுகிறோம் எங்கள் பிதாவே - 354

தொழுகிறோம் எங்கள் பிதாவே பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே அனுபல்லவி பரிசுத்த அலங்காரத்துடனே தரிசிப்பதினால் சரணம் சரணம் சரணங்கள் 1. வெண்மையும் சிவப்புமானவர் உண்மையே உருவாய்க் கொண்டவர் என்னையே மீட்டுக் கொண்டவர் அன்னையே இதோ சரணம் சரணம் --- தொழுகிறோம் 2. தலை தங்க மயமானவர் தலை மயிர் சுருள் சுருளானவர் பதினாயிரம் பேரில் சிறந்தவர் பதினாயிரமாம் சரணம் சரணம் --- தொழுகிறோம் 3. கண்கள் புறாக்கண்கள் போல கன்னங்கள் பாத்திகள் போல சின்னங்கள் சிறந்ததாலே எண்ணில்லாத சரணம் சரணம் --- தொழுகிறோம் 4. கரங்கள் பொன் வளையல்கள் போல நிறங்களும் தந்தத்தைப் போல கால்களும் கல் தூண்கள் போல காண்பதாலே சரணம் சரணம் --- தொழுகிறோம் 5. சமஸ்த சபையின் சிரசே நமஸ்காரம் எங்கள் அரசே பிரதானம் எம் மூலைக்கல்லே ஏராளமாய் சரணம் சரணம் --- தொழுகிறோம் 6. அடியார்களின் அஸ்திபாரம் அறிவுக்கெட்டாத விஸ்தாரம் கூடி வந்த எம் அலங்காரம் கோடா கோடியாம் சரணம் சரணம் --- தொழுகிறோம் 7. பார்த்திபனே கன தோத்திரம் கீர்த்தனம் மங்களம் நித்தியம் வாழ்க வாழ்க வாழ்க என்றும் அல்லேலூயா ஆமென் ஆமென் --- தொழுகிறோம்

பரம அழைப்பின் பந்தய - 894

பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய் நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன் ஓடுகிறேன் நான் ஓடுகிறேன் இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன் அல்லேலுயா அல்லேலுயா -4 1. இலாபமான அனைத்தையும...

துதி எடுத்தால் சாத்தான் - 878

துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான் முறுமுறுத்தால் திரும்பி வருவான்                          பல்லவி துதித்துப்பாடி மதிலை இடிப்போம் மகிழ்ந்து பாடி எரிகோ பிடிப்போம் ...

போற்றி துதிப்போம் எம் - 195

போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே புதிய இதயமுடனே நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை நான் என்றும் பாடித்துதிப்போம் – (2) இயேசு என்னும் நாமமே என் ஆத்துமாவின் கீதமே-எ...

குயவனே குயவனே படைப்பின் - 200

குயவனே குயவனே படைப்பின் காரணனே களிமண்ணான என்னையுமே கண்ணோக்கிப் பார்த்திடுமே 1. வெறுமையான பாத்திரம் நான் வெறுத்து தள்ளாமலே நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்க செ...

அல்லேலூயா துதி மகிமை - என்றும்

அல்லேலூயா துதி மகிமை - என்றும் இயேசுவுக்கு செலுத்திடுவோம் ஆ அல்லேலூயா அல்லேலூயா சிலுவையை சுமப்பாயா உலகத்தை வெறுப்பாயா உலகத்தை வெறுத்து இயேசுவின் பின்னே ஓடியே வருவாயா மோட்சத்தை அடைந்திடவே பாடுகள் படவேண்டும் பாடுகள் மத்தியில் பரமன் இயேசுவில் நிலைத்தே நிற்க வேண்டும் ஜெபத்திலே தரித்திருந்து அவர் சித்தம் நிறைவேற்று முடிவு பரியந்தம் அவரில் நிலை நிற்க பெலனைப் பெற்றுக்கொள்ளு சென்றவர் வந்திடுவார் அழைத்தே சென்றிடுவார் அவருடன் செல்ல ஆயத்தமாவோம் அவருடன் வாழ்ந்திடவே கண்ணீர் துடைத்திடுவார் கவலைகள் போக்கிடுவார் கரங்களை நீட்டியே கருணையோடு கர்த்தரே காத்திடுவார்

நானும் என் வீட்டாருமோவென்றால்

நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் நீயும் சேவிப்பாயா – நீயும் சேவிப்பாயா? 1. கர்த்தரையே சேவிப்பது ஆகாத தென்று கண்டால் யாரை நீ சேவிப்பாய் யென்பதை ...

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து - 667

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து பல்லவி சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து இவர் தாம், இவர் தாம், இவர் தாம் சரணங்கள் 1. நாம தாதி பிதாவின் திருப் பாலர் இவர், அனுகூலர் இவர், மனுவேலர் இவர் --- சமாதானம் 2. நேய கிருபையின் ஒரு சேயர் இவர், பரம ராயர் இவர், நாம தாயர் இவர் --- சமாதானம் 3. ஆதி நரர் செய்த தீதறவே, அருளானந்தமாய், அடியார் சொந்தமாய் --- சமாதானம் 4. ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே, அறிஞோர் தேடவே, ஆயரும் கூடவே --- சமாதானம் 5. மெய்யாகவே மே சியாவுமே, நம்மை நாடினாரே, கிருபை கூறினாரே --- சமாதானம் 6. அருளானந்த மோட்ச வழி காட்டினாரே, நிலை நாட்டினாரே, முடி சூட்டினாரே --- சமாதானம்

ஓ மனிதனே நீ எங்கே - 627

ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய் பல்லவி ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்? காலையில் மலர்ந்து மாலையில் மறையும் மலராய் வாழ்கின்றாய் சரணங்கள் 1. மண்ணில் பிறந்த மானிடனே மண்ணுக்கே நீ திரும்புவாய் மரணம் உன்னை நெருங்கும் போது எங்கே நீ ஓடுவாய் மரணத்தின் பின்னே நடப்பது என்ன என்பதை நீ அறிவாயோ --- ஓ 2. பாவியாய் பிறந்த மானிடனே பாவியாய் நீ மரிக்கின்றாய் இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டால் நீ இன்றே மரணத்தை வென்றிடுவாய் நித்திய ஜீவனை பெற்று நீ மோட்சத்தில் நிலைத்தென்றும் வாழ்ந்திடுவாய் --- ஓ

ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து

ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே என் ஏசு குருசை சுமந்தே என்நேசர் கொல்கதா மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார் 1. கன்னத்தில் அவர் ஓங்கி அறைய சின்னப் பிள்ளை போல் ஏங...

திருப்பாதம் நம்பி வந்தேன் - 167

திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பை கண்டைந்தேன் தேவ சமூகத்திலே இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரைத் தேற்றிடுமே சிலுவை நிழல் எந்தன் தஞ்சம் சுகமாய் அங்குத் தங்கிடுவேன் என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர் இன்னல் துன்ப நேரத்திலும் கருத்தாய் விசாரித்து என்றும் கனிவோடென்னை நோக்கிடுமே மனம் மாற மாந்தர் நீரல்ல மன வேண்டுதல் கேட்டிடும் எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே இயேசுவே உம்மை அண்டிடுவேன் என்னைக் கைவிடாதிரும் நாதா என்ன நிந்தை நேரிடினும் உமக்காக யாவும் சகிப்பேன் உமது பெலன் ஈந்திடுமே விசுவாசத்தால் பிழைத்தோங்க வீரபாதைக் காட்டினீரே மலர்ந்து கனிதரும் வாழ்வை விரும்பி வரம் வேண்டுகிறேன் உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே உண்மையாய் வெட்கம் அடையேன் தமது முகப் பிரகாசம் தினமும் என்னில் வீசிடுதே சத்துரு தலை கவிழ்ந்தோட நித்தமும் கிரியை செய்திடும் என்னைத் தேற்றிடும் அடையாளம் இயேசுவே இன்று காட்டிடுமே பலர் தள்ளின மூலைக்கல்லே பரம சீயோன் மீதிலே பிரகாசிக்கும் அதை நோக்கி பதறாமலே காத்திருப்பேன்

வெற்றிக் கொடி பிடித்திடுவோம் - 308

வெற்றிக் கொடி பிடித்திடுவோம் – நாம் வீரநடை நடந்திடுவோம் 1. வெள்ளம்போல சாத்தான் வந்தாலும் ஆவிதாமே கொடி பிடிப்பார் அஞ்சாதே என் மகனே நீ அஞ்சாதே என் மகளே 2. ஆயிரம் தான் த...

பலிபீடத்தில் என்னைப் பரனே

பலிபீடத்தில் என்னைப் பரனே படைக்கிறேனே இந்த வேளை அடியேனை திருச்சித்தம் போல ஆண்டு நடத்திடுமே (2) பல்லவி கல்வாரியின் அன்பினையே கண்டு விரைந்தோடி வந்தேன் (2) கழுவும் உம் ...

ஆவியானவரே அன்பின் - 256

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே இப்போ வாரும் இறங்கி வாரும் எங்கள் மத்தியிலே 1. உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே 2. பத்மு த...

இடைவிடா நன்றி உமக்குத்தானே

இடைவிடா நன்றி உமக்குத்தானே இணையில்லா தேவன் உமக்குத்தானே – (2) 1. என்ன நடந்தாலும் நன்றி ஐயா யார் கைவிட்டாலும் நன்றி ஐயா – (2) நன்றி நன்றி --- இடைவிடா 2. தேடி வந்தீரே நன்றி ஐயா தெ...

எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம்

எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் - தேவா என்றென்றும் நான் பாடுவேன் இந்நாள் வரை என் வாழ்விலே நீர் செய்த நன்மைக்கே 1. பூமியில் வாழ்கின்ற யாவும் அதின் மேல் உள்ள ஆகாயமும் வான்தூதர் சேனைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே 2. சூரிய சந்திரரோடே சகல நட்சத்திர கூட்டமும் ஆகாயப் பறவைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே 3. காட்டினில் வாழ்கின்ற யாவும் கடும் காற்றும் பனித் தூறலும் நாட்டினில் வாழ்கின்ற யாவும் நாதா உம்மைப் போற்றுதே 4. பாவ மனுக்குலம் யாவும் தேவா உம் அன்பினை உணர்ந்தே சிலுவையின் தியாகத்தைக் கண்டு ஒயா துதி பாடுதே

துதித்துப் பாடிட பாத்திரமே

1. துதித்துப் பாடிட பாத்திரமே துங்கவன் இயேசுவின் நாமமதே துதிகளின் மத்தியில் வாசஞ்செய்யும் தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே பல்லவி ஆ! அற்புதமே அவர் நடத்துதலே ஆனந்தமே பரமானந்தமே நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதே நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம் 2. கடந்த நாட்களில் கண்மணிபோல் கருத்துடன் நம்மைக் காத்தாரே கர்த்தரையே நம்பி ஜீவித்திட கிருபையும் ஈந்ததாலே ஸ்தோத்தரிப்போமே --- ஆ! அற்புதமே 3. அக்கினி ஊடாய் நடந்தாலும் ஆழியில் தண்ணீரைக் கடந்தாலும் சோதனையோ மிகப் பெருகினாலும் ஜெயம் நமக்கீந்ததால் ஸ்தோத்தரிப்போமே --- ஆ!அற்புதமே 4. இந்த வனாந்திர யாத்திரையில் இன்பராம் இயேசு நம்மோடிருப்பார் போகையிலும் நம் வருகையிலும் புகலிடம் ஆனதால் ஸ்தோத்தரிப்போமே --- ஆ!அற்புதமே 5. வாஞ்சைகள் தீர்த்திட வந்திடுவார் வாரும் என்றே நாம் அழைத்திடுவோம் வானத்திலே ஒன்று சேர்ந்திடும் நாள் விரைந்து நெருங்கிட ஸ்தோத்தரிப்போமே --- ஆ!அற்புதமே

உதவி வரும் கன்மலை நோக்கிப் 

உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன் வானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன் (2) 1. கால்கள் தள்ளாட விடமாட்டார் காக்கும் தேவன் உறங்க மாட்டார் (2) இஸ்ரவேலை காக்கிறவர் என்னாளும் தூங்க மாட்டார் (2) – உதவி 2. கர்த்தர் என்னை காக்கின்றார் எனது நிழலாய் இருகின்றார் (2) பகலினிலும் இரவினிலும் பாது காக்கின்றார் (2) – உதவி 3. கர்த்தர் எல்லா தீங்கிற்கும் விலக்கி என்னைக் காத்திடுவார் (2) அவர் எனது ஆத்துமாவை அனுதினம் காத்திடுவார் (2) – உதவி 4. போகும் போதும் காக்கின்றார் திரும்பும் போதும் காக்கின்றார் (2) இப்போது எப்போது என்னாளும் காக்கின்றார் (2) – உதவி

அடைக்கலமே உமதடிமை நானே

அடைக்கலமே உமதடிமை நானே ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே நித்தம் நித்தம் நான் நினைப்பேனே அளவற்ற அன்பினால் அணைப்பவரே எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா பாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே பக்தரின் பேரின்ப பாக்கியமிதே என்னை என்றும் போதித்து நடத்துபவரே கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே -நடக்கும் வழிதனை காட்டுபவரே நம்பி வந்தோனை கிருபை சூழ்ந்து கொள்ளுதே கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ குழியில் விழாதபடி காத்துக் கொண்டீரே அழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே பாவங்களை பாராதென்னை பற்றி கொண்டீரே சாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்ப தந்தீரே – உற்சாக ஆவி என்னை தாங்கச் செய்தீரே

உன்னத தேவன் உன்னுடன்

உன்னத தேவன் உன்னுடன் இருக்க உள்ளமே கலங்காதே அவர் நல்லவரே என்றும் வல்லவரே நன்மைகள் குறையாதே பாவத்தில் இருந்த உன்னை அவர் பரிசுத்தமாக்கினார் தாழ்மையில் கிடந்த உன்னை தம் தயவால் தூக்கினார் – உன்னத அந்நாளில் தம் பாதம் அமர்ந்த அன்னாளின் ஜெபம் கேட்டார் அனாதையாய் தவித்த அந்த ஆகாரின் குரல் கேட்டார் – உன்னத இயேசு உன் முன் நடந்தால் நீ யோர்தானைக் கடந்திடலாம் விசுவாசம் உனக்கிருந்தால் அந்த எரிகோவைத் தகர்த்திடலாம் – உன்னத

ஆராதனை நாயகன் நீரே - 89

ஆராதனை நாயகன் நீரே ஆராதனை வேந்தனும் நீரே ஆயுள் முடியும் வரை உம்மை தொழுதிடுவேன் சரணங்கள் 1. ஆயிரம் பேர்களில் சிறந்தோர் ஆண்டவர் இயேசு நீரே விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரே என்றென்றும் தொழுதிடுவேன் --- ஆராதனை 2. மாந்தர்கள் போற்றிடும் தெய்வம் மகிமையின் தேவன் நீரே முழங்கால் யாவுமே முடங்கிடுமே மகிழ்வுடன் துதித்திடவே --- ஆராதனை 3. முடிவில்லா ராஜ்ஜியம் அருள திரும்பவும் வருவேன் என்றீர் ஆயத்தமாய் நாம் சேர்ந்திடவே அனுதினம் வணங்கிடுவேன் -- ஆராதனை

வாதை உந்தன கூடாரத்தை அணுகாது - 186

வாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனே பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே ஆமென் ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா 1. உன்னதமான கர்த்தரையே உறைவிடமாக்கிக் கொண்டாய் அடைக்கலமாம் ஆண்டவனை ஆதாயமாக்கிக் கொண்டாய் 2. ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்து விட்டோம் ஆவி உண்டு வசனம் உண்டு அன்றாடம் வெற்றி உண்டு 3. கர்த்தருக்குள் நம் பாடுகள் ஒரு நாளும் வீணாகாது அசையாமல் உறுதியுடன் அதிகமாய் செயல்படுவோம் 4. அழைத்தவரோ உண்மையுள்ளவர் பரிசுத்தமாக்கிடுவார் ஆவி ஆத்துமா சரீரமெல்லாம் குற்றமின்றி காத்திடுவார் 5. நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் உண்டு வரப்போகும் இரட்சகரை எதிர்நோக்கி காத்திருப்போம் 6. அற்பமான ஆரம்பத்தை அசட்டை பண்ணாதே தொடங்கினவர் முடித்திடுவார் சொன்னதை செய்திடுவார் 7. ஆற்றல் அல்ல சக்தி அல்ல ஆவியினால் ஆகும் சோர்ந்திடாமல் நன்மை செய்வோம் துணையாளர் முன் செல்கிறார்

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு - 155

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு எப்போதும் வெற்றி உண்டு வெற்றி உண்டு -3 வெற்றி வெற்றி வெற்றி அல்லேலூயா அல்லேலுயா அல்லேலூயா  1. என்னென்ன துன்பம் வந்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன் யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன் 2. என் ராஜா முன்னே செல்கிறார் வெற்றிப் பவனி செல்கிறார் குருத்தோலை கையில் எடுத்து நான் ஓசன்னா பாடிடுவேன் 3. சாத்தானின் அதிகாரமெல்லாம் என் நேசர் பறித்துக் கொண்டார் சிலுவையில் அறைந்து விட்டார் காலாலே மிதித்து விட்டார் 4. பாவங்கள் போக்கிவிட்டார் சாபங்கள் நீக்கி விட்டார் இயேசுவின் தழும்புகளால் சுகமானேன் சுகமானேன் 5. மேகங்கள் நடுவினிலே என் நேசர் வரப்போகிறார் கரம்பிடித்து அழைத்துச் செல்வார் கண்ணீரெல்லாம் துடைப்பார்

கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே

கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே பல்லவி கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே களிகூர்ந்து கீதம் பாடு! சாலேமின் ராஜா நம் சொந்தமானார் சங்கீதம் பாடி ஆடு!  அல்லேலூயா! அல்லேலூயா! (2) சரணங்கள் 1. பாவத்தின் சுமையகற்றி --- கொடும் பாதாள வழி விலக்கி பரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்த பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா (2) --- கர்த்தாவின் 2. நீதியின் பாதையிலே --- அவர் நிதம் நம்மை நடத்துகின்றார்! எது வந்த போதும் மாறாத இன்ப புது வாழ்வைத் தருகின்றாரே அல்லேலூயா (2) --- கர்த்தாவின் 3. மறுமையின் வாழ்வினிலே --- இயேசு மன்னவன் பாதத்திலே பசிதாகமின்றி துதி கானம் பாடி பரனோடு நிதம் வாழுவோம்! அல்லேலூயா (2) --- கர்த்தாவின்

தேவா பிரசன்னம் தாருமே - 204

தேவா பிரசன்னம் தாருமேதேடி உம்பாதம் தொழுகிறோம் இயேசுவே உம் திவ்ய நாமத்திலே இன்பமுடன் கூடி வந்தோம் 1. வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதஸ்தலம் பணிந்து குனிந்து தொழுகிறோம் கனிந்தெம்மை கண்பாருமே --- தேவா 2. சாரோனின் ரோஜா லீலி புஷ்பம் சாந்த சொரூபி என் இயேசுவே ஆயிரம் பேரிலும் சிறந்தோராம் ஆண்டவரைத் தொழுகிறோம் --- தேவா 3. கர்த்தர் செய்த உபகாரங்கள் கணக்குரைத்து எண்ணலாகுமோ இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி இரட்சகரைத் தொழுகிறோம் --- தேவா 4. கர்த்தர் சமூகம் ஆனந்தமே பக்தர் சபையில் பேரின்பமே கர்த்தர் நாமத்தைக் கொண்டாடுகிறோம் சுத்தர்கள் போற்றும் தேவனே --- தேவா 5. நூற்றிருபது பேர் நடுவே தேற்றரவாளனே வந்தீரே உன்னத ஆவியை ஊற்றிடுமே மன்னவனே இந்நேரமே --- தேவா 6. எப்போ வருவீர் என் இயேசுவே ஏங்கி உள்ளம் உம்மைத் தேடுதே பறந்து விரைந்து தீவிரமே இறங்கி வாரும் இயேசுவே --- தேவா

ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு - 70

ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் வாழ்வளிக்கும் இயேசு ராஜாவுக்கு வாழ் நாளெல்லாம் ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன் ஆனந்த தொனியால் உயர்த்துவேன் 1. நீதியின் கரத்தினால் தாங்கி நடத்துவார் கர்த்தரே என் பெலன் எதற்குமே அஞ்சிடேன் --- ஜெயம் 2. அற்புதம் செய்பவர் அகிலம் படைத்தவர் யுத்தத்தில் வல்லவர் மீட்பர் ஜெயிக்கிறார் --- ஜெயம் 3. நம்பிக்கை தேவனே நன்மை தருபவர் வார்த்தையை அனுப்பியே மகிமைப் படுத்துவார் --- ஜெயம் 4. உண்மை தேவன் உருக்கம் நிறைந்தவர் என்னை காப்பவர் உறங்குவதில்லையே --- ஜெயம்

நான் உன்னைவிட்டு விலகுவதில்லை - 183

நான் உன்னைவிட்டு விலகுவதில்லை நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை நான் உன்னைக் காண்கின்ற தேவன் கண்மணி போல் உன்னைக் காண்பேன்(2) 1. பயப்படாதே நீ மனமே – நான் காத்திடுவேன் ...

ராஜா நீர் செய்த நன்மைகள்

ராஜா நீர் செய்த நன்மைகள் அவை எண்ணி முடியாதையா ஏறெடுப்பேன் நன்றிபலி என் ஜீவ நாளெல்லாம் நன்றி ராஜா இயேசு ராஜா (4) 1. அதிகாலை நேரம் தட்டிதட்டி எழுப்பி புது கிருபை தந்தீரையா ஆனந்த மழையில் நனைத்து நனைத்து தினம் நன்றி சொல்ல வைத்தீரையா-2 2. வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திட உம் வெளச்சம் தந்தீரையா பாதம் அமர்ந்து நான் உம் குரல் கேட்கும் பாக்கியம் தந்தீரையா 3. ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்து பாதுகாத்து வந்தீரையா உடல் சுகம் தந்து ஒரு குறைவின்றி வழிநடத்தி வந்தீரையா 4. துன்பத்தின் பாதையில் நடந்த அந்நாளில் தூக்கிச் சென்றீரையா அன்பர் உம்கரத்தால் அணைத்துஅணைத்து தினம் அதிசயம் செய்தீரையா 5. கூப்பிட்ட நாளில் மறுமொழி கொடுத்து விடுதலை தந்தீரையா குறைகளை நீக்கி கறைகளை போக்கி கூடவே வந்தீரையா

அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் - 131

அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் ஆராதனை ஆராதனை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் முழு பெலத்தோடு அன்புகூறுவேன் 1. எபிநேசரே எபிநேசரே இதுவரையில் உதவினீரே –உம்மை 2. எல்ரோயீ எல்ரோயீ என்னைக் கண்டீரே நன்றி ஐயா 3. யேகோவா ராப்பா யேகோவா ராப்பா சுகம் தந்தீரே நன்றி ஐயா

அதிகாலையில் (அன்பு நேசரே) உம்

அதிகாலையில் (அன்பு நேசரே) உம் திருமுகம் தேடி அர்ப்பணித்தேன் என்னையே ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள் அப்பனே உமக்குத் தந்தேன் ஆராதனை ஆராதனை (2) அன்பர் இயேசு ராஜனுக்கே ஆவி...