Skip to main content

வாதை உந்தன கூடாரத்தை அணுகாது - 186

வாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே

ஆமென் ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா

1. உன்னதமான கர்த்தரையே உறைவிடமாக்கிக் கொண்டாய்
அடைக்கலமாம் ஆண்டவனை ஆதாயமாக்கிக் கொண்டாய்

2. ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்து விட்டோம்
ஆவி உண்டு வசனம் உண்டு அன்றாடம் வெற்றி உண்டு

3. கர்த்தருக்குள் நம் பாடுகள் ஒரு நாளும் வீணாகாது
அசையாமல் உறுதியுடன் அதிகமாய் செயல்படுவோம்

4. அழைத்தவரோ உண்மையுள்ளவர் பரிசுத்தமாக்கிடுவார்
ஆவி ஆத்துமா சரீரமெல்லாம் குற்றமின்றி காத்திடுவார்

5. நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் உண்டு
வரப்போகும் இரட்சகரை எதிர்நோக்கி காத்திருப்போம்

6. அற்பமான ஆரம்பத்தை அசட்டை பண்ணாதே
தொடங்கினவர் முடித்திடுவார் சொன்னதை செய்திடுவார்

7. ஆற்றல் அல்ல சக்தி அல்ல ஆவியினால் ஆகும்
சோர்ந்திடாமல் நன்மை செய்வோம்
துணையாளர் முன் செல்கிறார்

Comments

Popular posts from this blog

விசுவாசியே நீ பதறாதே - 234

கர்த்தரின் கை குறுகவில்லை 1. கர்த்தரின் கை குறுகவில்லை கர்த்தரின் வாக்கு மாறிடாதே சுத்தர்களாய் மாறிடவே சுதன் அருள் புரிந்தனரே பல்லவி விசுவாசியே நீ பதறாதே விசுவாசியே நீ கலங்காதே விசுவாசத்தால் நீதிமான் இன்றும் என்றும் பிழைப்பான் 2. திருச்சபையே நீ கிரியை செய்வாய் திவ்விய அன்பில் பெருகிடுவாய் தலைமுறையாய் தலைமுறையாய் தழைத்திட அருள் புரிவாய் --- விசுவாசியே 3. நெஞ்சமே நீ அஞ்சிடாதே தஞ்சம் இயேசு உன் அரணே தம் ஜனத்தை சீக்கிரமாய் தம்முடன் சேர்த்துக் கொள்வார் --- விசுவாசியே 4. மேகம் போன்ற வாக்குத்தத்தம் சூழ நின்றே காத்திருக்க விசுவாசத்தால் உரிமை கொள்வாய் விரைந்து முன் ஏகிடுவாய் --- விசுவாசியே

அனைத்து சமயத்து மெய்ப்பொருள்

அனைத்து சமயத்து மெய்ப்பொருள் இயேசுவே வேதங்கள் கூறிடும் கருப்பொருள் இயேசுவே மெய்ப்பொருள் இயேசுவே... உண்மை என்பது ஒன்றே ஒன்றாகும் அண்மையில் சேர்ந்திட்டால் அதுவும...

எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம்

எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் - தேவா என்றென்றும் நான் பாடுவேன் இந்நாள் வரை என் வாழ்விலே நீர் செய்த நன்மைக்கே 1. பூமியில் வாழ்கின்ற யாவும் அதின் மேல் உள்ள ஆகாயமும் வான்தூதர் சேனைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே 2. சூரிய சந்திரரோடே சகல நட்சத்திர கூட்டமும் ஆகாயப் பறவைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே 3. காட்டினில் வாழ்கின்ற யாவும் கடும் காற்றும் பனித் தூறலும் நாட்டினில் வாழ்கின்ற யாவும் நாதா உம்மைப் போற்றுதே 4. பாவ மனுக்குலம் யாவும் தேவா உம் அன்பினை உணர்ந்தே சிலுவையின் தியாகத்தைக் கண்டு ஒயா துதி பாடுதே