உன்னத தேவன் உன்னுடன் இருக்க உள்ளமே கலங்காதே அவர் நல்லவரே என்றும் வல்லவரே நன்மைகள் குறையாதே பாவத்தில் இருந்த உன்னை அவர் பரிசுத்தமாக்கினார் தாழ்மையில் கிடந்த உன்னை தம் தயவால் தூக்கினார் – உன்னத அந்நாளில் தம் பாதம் அமர்ந்த அன்னாளின் ஜெபம் கேட்டார் அனாதையாய் தவித்த அந்த ஆகாரின் குரல் கேட்டார் – உன்னத இயேசு உன் முன் நடந்தால் நீ யோர்தானைக் கடந்திடலாம் விசுவாசம் உனக்கிருந்தால் அந்த எரிகோவைத் தகர்த்திடலாம் – உன்னத