பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்
நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன்
ஓடுகிறேன் நான்
என் இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்
அல்லேலூயா அல்லேலூயா
இலாபமான அனைத்தையுமே
நான் நஷ்டம் என்று கருதுகிறேன்
இயேசு ராஜாவின் இந்த வேலைக்காக
மகிழ்ச்சியுடன் நான் ஓடுகிறேன்
எத்தனைதான் இடர்கள் வந்தாலும்
விசுவாசத்திலே நிலைத்திருப்பேன்
எனக்காக அப்பா நியமித்த
இந்த பாதையிலே நான் ஓடுகிறேன்
என் மணவாளன் என் இயேசு ராஜாவை
நான் காணவே வாஞ்சிக்கிறேன்
என் அசை எல்லாம் என் இயேசுதானே
அவர் பொன்முகம் தான்
நான் பார்க்கணுமே
Comments
Post a Comment