Skip to main content

Posts

Showing posts from October, 2018

உன்னதமானவரின்

1. உன்னதமானவரின் - உயர் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் இது பரம சிலாக்கியமே பல்லவி அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே தம் சிறகுகளால் மூடுவார் 2. தேவன் என் அடைக்கலமே என் கோட்டையும் அரணுமவர் அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம் என் நம்பிக்கையும் அவரே --- அவர் 3. இரவின் பயங்கரத்துக்கும் பகலில் பறக்கும் அம்புக்கும் இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும் நான் பயப்படவே மாட்டேன் --- அவர் 4. ஆயிரம் பதினாயிரம் பேர்கள் உன் பக்கம் விழுந்தாலும் அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே உன் தேவன் உன் தாபரமே --- அவர் 5. தேவன் உன் அடைக்கலமே ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ ஒரு வாதையும் உன் கூடாரத்தையே அணுகாமலே காத்திடுவார் --- அவர் 6. உன் வழிகளிலெல்லாம் உன்னைத் தூதர்கள் காத்திடுவார் உன் பாதம் கல்லில் இடறாதபடி தங்கள் கரங்களில் ஏந்திடுவார் --- அவர் 7. சிங்கத்தின் மேலும் நடந்து வலுசர்ப்பத்தையும் மிதிப்பாய் அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால் உன்னை விடுவித்து காத்திடுவார் --- அவர் 8. ஆபத்திலும் அவரை நான் நோக்கிக் கூப்பிடும் வேளையிலும் என்னை தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே என் ஆத்தும நேசரவர் --- அவர...

எந்தன் நாவில் புதுப்பாட்டு

எந்தன் நாவில் புதுப்பாட்டு பல்லவி எந்தன் நாவில் புதுப்பாட்டு எந்தன் இயேசு தருகிறார் (2) அனுபல்லவி ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன் உயிருள்ள நாள் வரையில் (2) --- எந்தன் சரணங்கள் 1. பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில் தேவனவர் தீபமாம் என்னைத் தேற்றினார் --- ஆனந்தம் 2. வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார் பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் --- ஆனந்தம் 3. சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார் நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் --- ஆனந்தம் 4. தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார் நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் --- ஆனந்தம் 5. இவ்வுலக பாடு என்னை என்ன செய்திடும் அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன் --- ஆனந்தம்

உயிரோடு எழுந்தவரே

உயிரோடு எழுந்தவரே உயிரோடு எழுந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் ஜீவனின் அதிபதியே உம்மை ஆராதனை செய்கிறோம் அல்லேலூயா ஒசன்னா - (4) மரணத்தை ஜெயித்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் பாதாளம் வென்றவரே உம்மை ஆராதனை செய்கிறோம் அல்லேலூயா ஒசன்னா - (4)

எந்நாளுமே துதிப்பாய்...

எந்நாளுமே துதிப்பாய் கீர்த்தனை 303 பல்லவி எந்நாளு மேதுதிப்பாய் -என்னாத்துமாவே , நீ எந்நாளு மேதுதிப்பாய் ! அனுபல்லவி இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது-எந்நாளு சரணங்கள் பாவங்கள் எத்தனையோ-நினையாதிருந்தாருன் பாவங்கள் எத்தனையோ? பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப் பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி -எந்நாளு  எத்தனையோ கிருபை - உன்னுயிர்க்குச் செய்தாரே , எத்தனையோ கிருபை? நித்தமுனை முடி சூட்டினதுமன்றி , நேயமதாக ஜீவனை மீட்டதால் .-எந்நாளு நன்மையாலுன் வாயை நிறைத்தாரே ,பூர்த்தியாய் நன்மையாலுன் வாயை ; உன்வயது கழுகைப் போல் பலங் கொண்டு ஓங்கு இளமை போல் ஆகவே செய்தததால் -எந்நாளு  பூமிக்கும் வானத்துக்கும் -உள்ள தூரம் போலவே , பூமிக்கும் வானத்துக்கும் ; சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள் சாலவும் தங்குமே ,சத்தியமே யிது-ennalu  மன்னிப்பு மாட்சிமையாம் -மாதேவனருளும் மன்னிப்பு மாட்சிமையம் ; எண்ணுவாயோ கிழக்கு மேற்கின் தூரமே ? என்னில் உன் பாவம் அகன்றதத்தூரமே-எந்நாளுமே  தந்தைதன் பிள்ளைகட்கு - தயவோடிரங்கானோ தந்தை தன பிள்ளைகட்கு ? எந்த வேளையும் அவரோடு தங்கினால்; சொந்தம் பாராட்...