Skip to main content

Posts

Showing posts from January, 2021

சிலுவை நிழலில் அனுதினம்

சிலுவை நிழலில் அனுதினம் அடியான் சாய்ந்திளைப்பாறிடுவேன் - ஆ! ஆ! சிலுவையின் அன்பின் மறைவில் கிருபையின் இனிய நிழலில் ஆத்தும நேசரின் அருகில் அடைகிறேன் ஆறுதல் மனதில் 1. பாவப் பாரச் சுமையதால் சோர்ந்தே தளர்ந்த என் ஜீவியமே – ஆ! ஆ! சிலுவையண்டை வந்ததினால் சிறந்த சந்தோஷங் கண்டதினால் இளைப்படையாது மேலோகம் ஏகுவேன் பறந்தே வேகம் 2. இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டேன் இன்னல்கள் மறந்திடுவேன் - ஆ! ஆ! திருமறை இன்னிசை நாதம் தேனிலு மினிய வேதம் தருமெனக்கனந்த சந்தோஷம் தீர்க்குமென் இதயத்தின் தோஷம் 3. எவ்வித கொடிய இடருக்கு மஞ்சேன் இயேசுவைச் சார்ந்து நிற்பேன் - ஆ! ஆ! அவனியில் வியாகுலம் வந்தால் அவரையே நான் அண்டிக்கொண்டால் அலைமிக மோதிடு மந்நாள் ஆறுதல் அளிப்பாரே சொன்னால்

நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன்

நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன் நிம்மதி நிம்மதியே ஆர்வமுடனே பாடித்துதிப்பேன் ஆனந்தம் ஆனந்தமே அடைக்கலமே அதிசயமே ஆராதனை ஆராதனை 1. உம் வல்ல செயல்கள் நினைத்து நினைத்து உள்ளமே பொங்குதையா நல்லவரே நன்மை செய்தவரே நன்றி நன்றி ஐயா வல்லவரே நல்லவரே ஆராதனை ஆராதனை 2. பலியான செம்மறி பாவங்கள் எல்லாம் சுமந்து தீர்த்தவரே பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ பாக்கியம் பாக்கியமே பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை 3. எத்தனை இன்னல்கள் என் வாழ்வில் வந்தாலும் உம்மைப் பிரியேன் ஐயா இரத்தமே சிந்தி சாட்சியாய் வாழ்வேன் நிச்சயம் நிச்சயமே இரட்சகரே இயேசு நாதா ஆராதனை ஆராதனை