Skip to main content

Posts

Showing posts from May, 2020

என்னை மறவா இயேசு நாதா

என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் 1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள் வரைந்தெனக்காய் தந்ததாலே ஸ்தோத்திரம் ஆபத்திலே அரும் துணையே பாதைக்கு நல்ல தீபமதே 2. பயப்படாதே வலக்கரத்தாலே பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம் பாசம் என்மேல் நீர் வைத்ததினால் பறிக்க இயலாதெவருமென்னை 3. தாய் தன் சேயை மறந்து விட்டாலும் மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம் வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில் உன்னதா எந்தன் புகலிடமே 4. உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத் தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம் அக்கினியின் மதிலாக அன்பரே என்னைக் காத்திடுமே 5. என்னை முற்றும் ஒப்புவித்தேன் ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம் எப்படியும் உம் வருகையிலே ஏழை என்னைச் சேர்த்திடும்.