Skip to main content

Posts

Showing posts from April, 2020

உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே

உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே உம்மையன்றி யாரைப்பாடுவேன் – ஏசையா உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே சரணங்கள் 1. பரிசுத்தமே பரவசமே பரனேசருளே வரம் பொருளே தேடினதால் கண்டடைந்தேன் பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் — உம்பாதம் 2. புது எண்ணெய்யால் புது பெலத்தால் புதிய கிருபை புது கவியால் நிரப்பி நிதம் நடத்துகின்றீர் நூதன சாலேமில் சேர்த்திடுவீர் — உம்பாதம் 3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் நெருங்கி உதவி எனக்களித்தீர் திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல் தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் — உம்பாதம் 4. என் முன் செல்லும் உம் சமூகம் எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல் உமது கோலும் உம் தடியும் உண்மையாய் என்னையும் தேற்றிடுதே — உம்பாதம் 5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும் கொடியாய் அடியேன் படர்ந்திலங்க கிளை நறுக்கிக் களை பிடுங்கி கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் — உம்பாதம் 6. என் இதய தெய்வமே நீர் எனது இறைவா ஆருயிரே நேசிக்கிறேன் இயேசுவே உம் நேசமுகம் என்று கண்டிடுவேன் — உம்பாதம் 7. சீருடனே பேருடனே சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில் சீக்கிரமாய் சேர்த்திடுவீர் சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் — உம்பாதம்

ஏறுகின்றார் தள்ளாடித் தவழ்ந்து களைப்போடே

ஏறுகின்றார் தள்ளாடித் தவழ்ந்து களைப்போடே என் இயேசு குருசை சுமந்தே என் நேசர் கொல்கொதா மலையின்மேல் நடந்தே ஏறுகின்றார் 1.கன்னத்தில் அவன் ஓங்கி அடிக்கச் சின்னப் பிள்ளைபோல் ஏங்கி நின்றார் அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி ஆண்டவரை அனுப்புகின்றான் - ஏறு 2.மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே நெஞ்சைப் பிளந்தான் ஆ! கொடுமை இரத்தமும் நீரும் ஓடி வருதே இரட்சகரை நோக்கியே பார் - ஏறு 3.இந்தப்பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்ச் சொந்தப்படுத்தி ஏற்றுக்கொண்டார் நேசிக்கின்றாயோ இயேசு நாதரை நேசித்து வா குருசெடுத்தே - ஏறு 4.சேவல் கூவிடும் மூன்று வேளையும் சொந்த குருவை மறுதலித்தான் ஓடி ஒளியும் பேதுருவையும் தேடி அன்பாய் நோக்குகின்றார் - ஏறு 5.பின்னே நடந்த அன்பின் சீஷன்போல் பின்பற்றி வா சிலுவை வரை காடியைப் போல் கசந்திருக்கும் கஷ்டங்களை அவரிடம் சொல் - ஏறு 6.செட்டைகளின் கீழ் சேர்த்தனைத்திடும் சொந்தத் தாயின் அன்பிதுவே எருசலமே! எருசலமே! என்றழுதார் கண் கலங்க - ஏறு

குயவனே குயவனே படைப்பின் காரணனே - 200

குயவனே குயவனே படைப்பின் காரணனே களிமண்ணான என்னையுமே கண்ணோக்கிப் பார்த்திடுமே 1.வெறுமையான பாத்திரம் நான் வெறுத்துத் தள்ளாமலே நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்யுமே வேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம் இயேசுவை போற்றிடுதே என்னையும் அவ்விதப் பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே 2.விலைபோகாத பாத்திரம் நான் விரும்புவாரில்லையே விலையில்லா உம் கிருபையால் உகந்ததாக்கிடுமே தடைகள் யாவும் நீக்கி என்னைத் தம்மைப் போல் மாற்றிடுமே உடைத்து என்னை உந்தனுக்கே உடைமையாக்கிடுமே 3.மண்ணாசையில் நான் மயங்கியே மெய்வழி விட்டகன்றேன் கண்போன போக்கைப் பின்பற்றினேன் கண்டேனில்லை இன்பமே காணாமல்போன பாத்ரம் என்னைத் தேடிவந்த தெய்வமே வாழ்நாளெல்லாம் உம்பாதம் சேரும் பாதையில் நடத்திடுமே

தேவப் பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ

தேவப் பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே ஆவலதாய் எனைப் பைம்புல்மேல் அவர் மேய்த் தமர் நீர் அருளுகின்றார் 1. ஆத்துமத் தன்னைக் குளிரப்பண்ணி அடியேன் கால்களை நீதி என்னும் நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம் நிதமும் சுகமாய் நடத்துகின்றார் 2. சாநிழல் பள்ளத் திறங்கிடினும் சற்றும் தீங்கு கண்டஞ்சேனே வானபரன் என்னோடிருப்பார் வளை தடியும் கோலுமே தேற்றும் 3. பகைவர்க் கெதிரே ஒரு பந்தி பாங்காய் எனக்கென் றேற்படுத்திச் சுக தயிலம் கொண்டென் தலையைச் சுபமாய் அபிஷேகம் செய்குவார் 4. ஆயுள் முழுவதும் என் பாத்ரம் அருளும் நலமுமாய் நிரம்பும் நேயன் வீட்டினில் சிறப்போடே நெடுநாள் குடியாய் நிலைத்திருப்பேன

குதூகலம் கொண்டாட்டமே - 964

குதூகலம் கொண்டாட்டமே என் இயேசுவின் சந்நிதானத்தில் ஆனந்தம் ஆனந்தமே என் அப்பாவின் திருப்பாதத்தில் 1. பாவமெல்லாம் பறந்தது நோய்களெல்லாம் தீர்ந்தது இயேசுவின் இரத்தத்தினால் கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்பு பரிசுத்த ஆவியினால் 2. தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும் தேவாலயம் நாமே ஆவியான தேவன் அச்சாரமானார் அதிசயம் அதிசயமே 3. வல்லவர் என் இயேசு வாழ வைக்கும் தெய்வம் வெற்றிமேலே வெற்றி தந்தார் ஒருமனமாய் கூடி ஓசன்னா பாடி ஊரெல்லாம் கொடியேற்றுவோம் 4. எக்காள சத்தம், தூதர்கள் கூட்டம் நேசர் வருகின்றார் ஒருநொடி பொழுதில் மறுரூபமாவோம் மகிமையில் பிரவேசிப்போம்

கால் மிதிக்கும் தேசமெல்லாம்-என் - 963

கால் மிதிக்கும் தேசமெல்லாம்-என் கர்த்தருக்கு சொந்தமாகும் கண்பார்க்கும் பூமியெல்லாம் கல்வாரி கொடிபறக்கும் 1. பறக்கட்டும் பறக்கட்டும் சிலுவையின் ஜெயக்கொடி-அல்லேலூயா உயரட்டும் உயரட்டும் இயேசுவின் திருநாமம்-அல்லேலூயா 2. எழும்பட்டும் எழும்பட்டும் கிதியோனின் சேனைகள் முழங்கட்டும் முழங்கட்டும் இயேசுதான் வழியென்று 3. செல்லட்டும் செல்லட்டும் ஜெபசேனை துதிசேனை வெல்லட்டும் வெல்லட்டும் எதிரியின் எரிகோவை 4. திறக்கட்டும் திறக்கட்டும் சவிசேஷ வாசல்கள் வளரட்டும் வளரட்டும் அபிஷேக திருச்சபைகள்

கலங்காதே கலங்காதே - 958

கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார் முள்முடி உனக்காக இரத்தமெல்லாம் உனக்காக பாவங்களை அறிக்கையிடு பரிசுத்தமாகி விடு நீ கல்வாரி மலைமேலே காயப்பட்ட இயேசுவைப் பார் கரம் விரித்து அழைக்கின்றார் கண்ணீரோடு ஓடி வா நீ காலமெல்லாம் உடன் இருந்து கரம்பிடித்து நடத்திச் செல்வார் கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணி போல் காத்திடுவார் உன்னை உலகத்தின் வெளிச்சம் நீ எழுந்து ஒளி வீசு மலைமேல் உள்ள பட்டணம் – தம்பி (நீ) மறைவாக இருக்காதே உலகம் உன்னை வெறுத்திடலாம் உற்றார் உன்னைத் துரத்திடலாம் உன்னை அழைத்தவரோ உள்ளங்கையில் ஏந்திடுவார் உன் நோய்கள் சுமந்து கொண்டார் உன் பிணிகள் ஏற்றுக் கொண்டார் நீ சுமக்கத் தேவையில்லை விசுவாசி அது போதும்