Skip to main content

Posts

Showing posts from January, 2019

நன்றிப்பலிபீடம் கட்டுவோம்

நன்றிப்பலிபீடம் கட்டுவோம் நல்ல தெய்வம் நன்மை செய்தார் செய்த நன்மை ஆயிரங்கள் சொல்லிச் சொல்லி பாடுவேன் நன்றி தகப்பனே நன்மை செய்தீரே 1. ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர் பாவம் நீங்கிட கழுவி விட்டீர் உமக்கென்று வாழ பிரித்தெடுத்து உமது ஊழியம் செய்ய வைத்தீர் 2. சிறந்த முறையிலே குரல் எழுப்பும் சிலுவை இரத்தம் நீர் சிந்தினீரே இரத்தக் கோட்டைக்குள் வைத்துக் கொண்டு எதிரி நுழையாமல் காத்துக்கொண்டீர் 3. இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர் இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டீர் உமக்கு சொந்தமாய் வாங்கிக் கொண்டு உரிமைச் சொத்தாக வைத்துக் கொண்டீர் 4. பார்க்கும் கண்களை தந்தீரய்யா பாடும் உதடுகள் தந்தீரய்யா உழைக்கும் கரங்களை தந்தீரய்யா ஓடும் கால்களைத் தந்தீரய்யா 5. இருக்க நல்ல ஒரு வீடு தந்தீர் வாழத் தேவையான வசதி தந்தீர் கடுமையாக தினம் உழைக்க வைத்தீர் கடனே இல்லாமல் வாழ வைத்தீர் 6. புதிய உடன்பாட்டின் அடையாளமாய் புனித இரத்தம் ஊற்றினீரே சத்திய ஜீவ வார்த்தையாலே மரித்த வாழ்வையே மாற்றினீரே 7. எதிராய் வாழ்ந்து வந்த இவ்வுலகை ஒப்புரவாக்கினீர் உம் இரத்தத்தால் தூரம் வாழ்ந்து வந்த எங்களையே அருகில் கொண்டுவந்தீர் ஆவியினால...

பரம அழைப்பின் பந்தய

பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய் நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன் ஓடுகிறேன் நான் ஓடுகிறேன் இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன் அல்லேலுயா அல்லேலுயா -2 இலாபமான அனைத்தையுமே நான் நஷ்டமென்று கருதுகிறேன் இயேசு ராஜவின் இந்த வேலைக்காக மகிழ்ச்சியுடன் நான் ஓடுகிறேன் எத்தனை தான் இடர்கள் வந்தாலும் விசுவாசத்திலே நிலைத்திருப்பேன் எனக்காக இயேசு நியமித்த இந்த பாதையிலே நான் ஓடுகிறேன் என் மணவாளன் இயேசு ராஜாவை நான் காணவே வாஞ்சிக்கிறேன் என் ஆசை எல்லாம் என் இயேசு தானே அவர் பொன்முகம் தான் நான் பார்க்கணுமே என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம் என் இயேசுவுக்காய் அர்ப்பணிக்கிறேன் நான் உயிர் வாழும் இந்த நாட்கள் எல்லாம் இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்

சந்தோஷமாயிருங்க - 467

சந்தோஷமாயிருங்க பல்லவி சந்தோஷமாயிருங்க எப்பொழுதும் சந்தோஷமாயிருங்க உயர்வானாலும், தாழ்வானாலும் சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார் சரணங்கள் 1. நெருக்கத்தின் நேரத்திலும் தண்ணீரின் பாதையிலும் நம்மை காண்கின்ற தேவன் நம்மோடிருப்பதால், சந்தோஷமாயிருங்க --- சந்தோஷமா 2. விசுவாச ஓட்டத்திலும் ஊழிய பாதையிலும் நம்மை வழிநடத்தும் தேவன் நம்மோடிருப்பதால், சந்தோஷமாயிருங்க --- சந்தோஷமா 3. தோல்விகள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும் Iநமக்கு ஜெயம் கொடுக்கும் தேவன் நம்மோடிருப்பதால், சந்தோஷமாயிருங்க --- சந்தோஷமா 4. என்ன தான் நேர்ந்தாலும் சோர்ந்து போகாதீங்க நம்மை அழைத்த தேவன் கைவிட மாட்டார், சந்தோஷமாயிருங்க --- சந்தோஷமா

கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு

கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு கலங்கித் தவிக்காதே அவரே உன்னை ஆதரிப்பார் அதிசயம் செய்வார் 1. நீதிமான் தள்ளாட விடமாட்டார் நித்தமும் காத்து நடத்திடுவார் 2. நம்மைக் காக்கும் தேவனவர் நமது நிழலாய் இருக்கின்றவர் 3. தகப்பனும் தாயும் கைவிட்டாலும் அவரே நம்மை அணைத்துக் கொள்வார் 4. கர்த்தர் நம் சார்பில் இருக்கும்போது நமக்கு எதிராய் நிற்பவன் யார் 5. வாழ்வை கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்போம் அவரே எல்லாம் வாய்க்கச் செய்வார் 6. என்றும் அவரில் மகிழ்ந்திருப்போம் இதய விருப்பம் நிறைவேற்றுவார

எந்தன் கன்மலையானவரே

எந்தன் கன்மலையானவரே என்னை காக்கும் தெய்வம் நீரே வல்லமை மாட்சிமைநிறைந்தவரே மகிமைக்கு பாத்திரரே - 2 ஆராதனை உமக்கே - 4 உந்தன் சிறகுகளின் நிழலில் என்றென்றும் மகிழச்செய்தீர் தூயவரே என் துணையாளரே துதிக்கு பாத்திரரே என் பெலவீன நேரங்களில் உம் கிருபை தந்தீரைய்யா இயேசு ராஜா என் பெலனானீர் எதற்கும் பயம் இல்லையே எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம் உம்மை புகழ்ந்து பாடிடுவேன் ராஜா நீர் செய்த நன்மைகளை எண்ணியே துதித்திடுவேன்

உருகாதோ நெஞ்சம் அவர்தானே தஞ்சம்

உருகாதோ நெஞ்சம் அவர்தானே தஞ்சம் உனக்காக பலியாக வந்தார் – கலங்காதோ கண்கள் வழியாதோ கண்ணீர் கல்வாரி காட்சியைக் கண்டு நடமாட முடியா தடுமாறிக் கிடந்த முடவனின் குரல் கேட்டு நின்று இடம் தேடி வந்து இதயத்தில் நொந்து நடமாடச் செய்தததாலே உந்தன் கால்களில் ஆணியோ அரசே அதுதான் சிலுவையின் பரிசே! கரமெல்லாம் குஷ்டம் தீராத கஷ்டம் கதறிய மனிதனைக் கண்டு கனிவோடு நோக்கி கரம் தொட்டு தூக்கி கருணையாய் சுகம் தந்ததாலே உந்தன் கரங்களில் ஆணியோ அரசே அது தான் சிலுவையின் பரிசே! இதயத்தில் பாவம் குடி கொண்டதாலே இகமதில் அழிகின்ற ஆத்மா பாவத்தை நீக்கி பாவியை மீட்டு இரட்சிப்பின் வழி தந்ததாலே உந்தன் இதயத்தில் ஈட்டியோ அரசே அதுதான் சிலுவையின் பரிசே!

பாலைவனமாய் இருந்த எங்களை

பாலைவனமாய் இருந்த எங்களை சோலைவனமாய் மாற்றினீரய்யா அறுந்த கொடியைப் போலிருந்தோமே எங்களை செடியோடே இணைத்துவிட்டீரே கண்ணீரிலே மூழ்கியிருந்தோமே எங்களை களிப்பாக மாற்றினீரையா வறண்ட நிலத்தைப் போலிருந்தோமே எங்களை வயல்வெளியாய் மாற்றினீரையா

ஆறுதலின் தெய்வமே

ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச்சமூகம் எவ்வளவு இன்பமானது 1. ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி ஆர்வமுடன் கதறுகின்றது உள்ளமும் உடலும் ஒவ்வொரு நாளும் கெம்பீரித்து சத்தமிடுது – ஆமென் 2. உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர் உண்மையிலே பாக்கியவான்கள் தூய மனதுடன் துதிப்பார்கள் துதித்துக் கொண்டிருப்பார்கள் – ஆமென் 3. உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம் உண்மையிலே பாக்கியவான்கள் ஓடினாலும் களைப்படையார் நடந்தாலும் சோர்வடையார் – ஆமென் 4. கண்ணீரின் பாதையில் நடக்கும்போதெல்லாம் களிப்பான நீருற்றாய் மாற்றிக்கொள்வார்கள் வல்லமை மேலே வல்லமை கொண்டு சீயோனைக் காண்பார்கள் – ஆமென் 5. வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின் வாசலில் காத்திருப்பேன் – ஆமென்

ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம்

ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து ஆறுதல் அடைகின்றேன் அமைதி பெறுகின்றேன் 1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை தாங்கிடும் நங்கூரமே (3) தினம் 2. எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச எனைக் காக்கும் புகலிடமே – தினம் 3. நிலையற்ற வாழ்வின் நிம்மதியே நீங்காத பேரின்பமே – என்னைவிட்டு 4. இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராஜா என் வாழ்வின் ஆனந்தமே 5. மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா மாபெரும் சந்தோஷமே 6. காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும் நல்ல சமாரியனே

கலங்காதே கலங்காதே

கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னை கைவிடமாட்டார் 1. முள்முடி உனக்காக இரத்தமெல்லாம் உனக்காக பாவங்களை அறிக்கையிடு பரிசுத்தமாகிவிடு – நீ 2. கல்வாரி மலைமேலே காயப்பட்ட இயேசுவைப் பார் கரம் விரித்து அழைக்கின்றார் கண்ணீரோடு ஓடி வா – நீ 3. காலமெல்லாம் உடனிருந்து கரம்பிடித்து நடத்திச் செல்வார் கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணி போல் காத்திடுவார் – உன்னை 4. உலகத்தின் வெளிச்சம் நீ எழுந்து ஒளி வீசு மலைமேல் உள்ள பட்டணம் – தம்பி (நீ) மறைவாக இருக்காதே 5. உன் நோய்கள் சுமந்து கொண்டார் உன் பிணிகள் ஏற்றுக்கொண்டார் நீ சுமக்கத் தேவையில்லை விசுவாசி அது போதும் 6. உலகம் உன்னை வெறுத்திடலாம் உற்றார் உன்னைத் துரத்திடலாம் உன்னை அழைத்தவரோ உள்ளங்கையில் ஏந்திடுவார்